100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பணிகளை முறையாக வழங்க கோரி சாலை மறியல் !
100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பணிகளை முறையாக வழங்க கோரி சாலை மறியல் !
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே சங்கம்பட்டி கிராமத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பணிகளை முறையாக வழங்க கோரி 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல்.
துறையூர் அருகே உள்ள கொட்டையூர் பஞ்சாயத்தானது கொட்டையூர் கருப்பம்பட்டி மெய்யம்பட்டி சங்கம்பட்டி ஆகிய நான்கு குக்கிராமங்களை உள்ளடக்கியதாகும். இதில் சங்கம் பட்டி கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் உள்ளனர்.
இவர்களுக்கு கடந்த 10 தினங்களுக்கு மேலாக முறையாக பணி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது மேலும் ஏற்கனவே செய்த பணிக்கு முறையாக ஊதியமும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதை கண்டித்து சங்கபட்டியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் துறையூரில் இருந்து எரகுடி செல்லும் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது இதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த துறையூர் காவல்துறையினர் பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் சாலை மறியலில் கைவிட்டு கலைந்து சென்றனர்.