100 சத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி மனித சங்கிலி பேரணி!
திருச்சி மாநகராட்சி மேற்குத் தொகுதிக்கு உட்பட்ட பாரதிதாசன் சாலை மாநகராட்சி வளாகம் முன்பு 100 சதவீதம் ஓட்டளிப்பை வலியுறுத்தி மனித சங்கிலி நடைபெற்றது. திருச்சி வருவாய் கோட்டாட்சியர் சாலை தவவளன், உதவி ஆணையர் எம். கனகராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.
எதிர்வரும் சட்டசபை தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தியும், வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள், பேரணி, கோலங்கள், வாக்காளர் உறுதிமொழி ஆகிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய, மனித சங்கிலி பேரணி நடைபெற்றது. இதில், மாநகராட்சி அலுவலர்கள் தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள், மாநகராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், உதவி செயற்பொறியாளர் ஜி.வேல்முருகன் உதவி வருவாய் அலுவலர்கள், பொறியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.