சாராயக் கடையை சூறையாடிய கும்பல் கைது
சாராயக் கடையை சூறையாடிய கும்பல் கைது…
கடந்த மே 14-ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி காவல் சரகத்திற்கு உட்பட்ட பாலக்குறிச்சி அரசு மதுபான கடையில் ரூபாய் 75 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்கள் மர்ம நபர்கள் கொள்ளையடித்து செல்லப்பட்டது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா நேரில் சென்று பார்வையிட்டு. பின்னர் குற்றவாளிகளை விரைவாக பிடிக்கும் பொருட்டு 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட்டார்.
அதனடிப்படையில் இன்று 16/05/2021 குற்றவாளிகள் 8 பேர் தனி படையினரால் கைது செய்யப்பட்டனர். அதில்
ஹரிஹரன் திருக்கண்ணங்குடி.
குரு பாலன் திருக்கண்ணங்குடி.
தனராஜ் திருக்கண்ணங்குடி.
ரதீஷ் குமார் செல்லூர்,நாகப்பட்டினம்.
கலையரசன்
செல்லூர் நாகப்பட்டினம்
சதீஷ் செல்லூர் நாகப்பட்டினம்.
தமிழ்மாறன் திருக்கண்ணங்குடி.
புல்புல் (எ) பிரவீன் திருக்கண்ணங்குடி. ஆகிய 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் மது பாட்டில்கள் சூறையாடிய வழக்கில் இக்கும்பலை சேர்ந்த இரண்டு பேர் தலைமறைவாக உள்ளதாக போலீஸார் தரப்பில் விசாரணையில் தெரியவந்துள்ளது.
– ஜித்தன்