சிறுமிக்காக பதறிய திருச்சி போலீஸ்..

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சிறுமிக்காக பதறிய திருச்சி போலீஸ்..

திருச்சி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வேர் ஹவுஸ் அம்பேத்கர் நகர் பகுதியில் கடந்த 18/06/2021 அன்று 10 வயது மதிக்கத்தக்க சிறுமி காணவில்லை என்று புகார் எழும்பியது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

இதுதொடர்பாக பாலக்கரை இன்ஸ்பெக்டர் ராஜா, புகாரை ஏற்று விசாரணை தொடங்கியுள்ளார். அதில் பாலக்கரை அம்பேத்கர் நகரைச் சேர்ந்த டேவிட் என்பவரது 10 வயது மகள் ஜெனிட்டா தனது அத்தை திட்டியதால் கோபித்துக்கொண்டு, பாத்ரூம் செல்வதாக கூறி வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

சிறுமியின் தந்தை திருநெல்வேலி உள்ளதால் சிறுமி குறித்த எந்த தகவலும் கிடைக்காமல் போனது. இதனால் பதட்டம் அடைந்த டேவிட் தனது மகளுக்கு ஏதாவது நிகழ்ந்திருக்குமோ என்ற அச்சத்திலேயே இருந்து வந்தார்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இந்நிலையில் இத்தகவல் மாநகர காவல் பெரிய அதிகாரிகளுக்கு தெரிய வர மாநகர போக்குவரத்து மற்றும் குற்றப்பிரிவு காவல் துணை ஆணையர்
முத்தரசு, சம்பவ இடத்திற்கு குழந்தை தொடர்பான தகவல்களை விசாரிக்க ஆரம்பித்துள்ளார். இதனிடையில் மாநகர குழந்தை மற்றும் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஒருபக்கம் குழந்தைகள் அமைப்புகள் மூலம் தேட ஆரம்பித்தனர். கடந்த இரண்டு நாட்களாக மாநகர போலீசார் சிறுமி தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு மாநகர பகுதிகளில் சந்தேகிக்கும் வண்ணம் உள்ள வாகனங்களை ஆய்வு செய்வது என பலத்த போலீஸ் அமைத்து தேடப்பட்டு வந்தது.

மேலும் நேற்று 19/06/2021 பாலக்கரை பகுதியில் சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சிறுமி வீட்டைவிட்டு சாலையை கடந்து செல்லும் பதிவு உள்ளது ஆனால் எங்கு சென்றுள்ளார் என்ற பதிவு கிடைக்காமல் போனதால் பதறிப் போயினர் திருச்சி போலீஸார்.

இந்நிலையில் இரவு 9 மணி அளவில் சிறுமியின் அப்பா டேவிட்டிற்கு போன் ஒன்று சென்றுள்ளது அதில் பேசியது ஜெனிட்டா, தான் பாலக்கரை செங்குளம் காலனி குடிசை மாற்று வாரியத்தில் உள்ள தனது தோழி வீட்டில் இருப்பதாக கூறியுள்ளார். அத்தை திட்டியதால் வீட்டைவிட்டு கோபித்துக்கொண்டு வந்ததாக அவரிடம் கூறியுள்ளார். இந்நிலையில் போலீசார் சிறுமியை மீட்டு அவரின் அப்பாவிடம் ஒப்படைத்தனர்..

10 வயது சிறுமி காணாமல் போனதால் கடந்த இரண்டு நாட்களாக மாநகர மையப்பகுதியான பாலக்கரை பதட்டத்துடனே இருந்து வந்தது.

ஜித்தன்

Saravana Multispeciality Hospital Pvt. Ltd., Madurai,

Leave A Reply

Your email address will not be published.