ஓடும் ரயிலில் ஏறி ஒருவர் பலி -திருச்சி ரயில் நிலையத்தில் பரபரப்பு..
ஓடும் ரயிலில் ஏறி ஒருவர் பலி -திருச்சி ரயில் நிலையத்தில் பரபரப்பு..
திருச்சி மத்திய ரயில் நிலையத்தில் நேற்று 15/09/2021 நள்ளிரவு தூத்துக்குடியிலிருந்து சென்னை நோக்கி செல்லும் முத்துநகர் (PEARLSCITY) வண்டியானது,
திருச்சி மத்திய ரயில் நிலையத்தில் 3 வது நடைமேடையில் நின்றுள்ளது.
அப்போது ரயிலில் பயணித்து வந்த பயணி ஒருவர் நடைமேடையில் உள்ள கடையில் உணவுபண்டம் வாங்க இறங்கி உள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக திடீரென ரயில் எடுத்ததால், ஓடி சென்று ஏற முற்பட்டுள்ளார்.
அப்போது கால் தடுமாறி ரயில் பெட்டிகளுக்கு இடையே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அதன்பின் சம்பவ இடத்திற்கு அந்த ரயில்வே காவல்துறையினர் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
-இந்தர்ஜித்