தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த 200 மேற்பட்ட புதிய வாக்காளர்கள் !
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தில் 200க்கும் மேற்பட்ட புதிய இளைஞர்கள் மற்றும் மாற்று கட்சியினர் இணைந்தனர்.
டிச.29 தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தில் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள், புதிய வாக்காளர்கள் மற்றும் மாற்றுக் கட்சி இளைஞர்களும் நமது தமிழக வெற்றிக் கழகத்தில், இணைந்தார்கள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்த நிகழ்ச்சி தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்டது பின்பு உறுதிமொழி எடுக்கப்பட்டு கொள்கை கோட்பாடுகளை இளைஞர்களுக்கும், புதிய வாக்காளர்களுக்கும் விளக்கி இளைஞர்களை கழகத்தில் இணைத்தார்கள்.
மேலும் இந்த இணைப்பு விழாவில் வருகிற சட்டமன்ற தேர்தலில் தூத்துக்குடி மாவட்டம் 6 தொகுதியிலும் வெற்றி வாகை சூடுவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
— மணிபாரதி.