20(24) GOOD NEWS ! ஜில்லுன்னு சினிமா…

0

20(24) GOOD NEWS ! ஜில்லுன்னு சினிமா…

2024 ஆங்கில புத்தாண்டின் முதல் இதழ் என்பதால் யாரைப் பற்றியும் குற்றம் சொல்ல வேண்டாம் எவரைப் பற்றியும் குறை சொல்ல வேண்டாம் என்ற முடிவுடன் 24 நல்லவிதமான செய்திகளை எழுதி உள்ளோம். அதுக்காக இந்த வருஷம் பூரா இதே மாதிரியான செய்திகளை எழுதும் வாய்ப்பில்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

1.சூப்பர் ஸ்டார் ரஜினி கௌரவத் தோற்றத்தில் நடிக்கும் ‘லால்சலாம்’ படம் இந்த மாதம் ரிலீஸ் ஆகிறது ரஜினியின் 170 படமான வேட்டையன் சூட்டிங் மார்ச் இறுதியில் முடியலாம். இதை அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் டைரக்சனில் 171 வது படத்தில் நடிக்கிறார் ரஜினி 2025 இல் தனது 75 ஆவது வயதில் 175வது படத்துடன் சினிமாவில் இருந்து ஓய்வு பெறும் எண்ணத்தில் உள்ளாராம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

2.’இந்தியன்-2′ முடிந்து இந்தியன்- 3 சூட்டிங் மூலமாக இருக்கிறார் கலைஞானி கமலஹாசன் 234 வது படமாக தக்கலைப்பில் மணிரத்தனத்துடன் கைகோர்த்துள்ள கமல் 235 வது படத்தில் மீண்டும் லோகேஷ் கனகராஜ் உடன் ஹைகோர்க்கும் ஐடியாவில் உள்ளாராம் . இது அனேகமாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமல் நடிக்கும் முதல் படமாக இருக்கலாம்.

கமலஹாசன்-லோகேஷ் கனகராஜ்
கமலஹாசன்-லோகேஷ் கனகராஜ்

3. ஏ.ஜி.எஸ். தயாரிக்க, வெங்கட்பிரபு டைரக்ட் பண்ணும் ‘GOAT’ படத்தில் நடித்து வரும் விஜய்யின் அடுத்த படம் ‘லியோ’ தயாரிப்பாளர் லலித்குமாருக்கு இருக்கலாம்.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

4. மகிழ்திருமேனி டைரக்ஷனில் ‘விடா முயற்சி’யில் நடித்து வரும் அஜீத்தின் அடுத்த கால்ஷீட் சிவாவுக்கு கிடைக்கலாம். சிவா இப்போது சூர்யாவை வைத்து டைரக்ட் பண்ணிவரும் ‘கங்குவா’ படம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ரிலீசான பிறகு அஜீத் படத்தின் முன் தயாரிப்புப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளார் சிவா.

சிவா - அஜீத்
சிவா – அஜீத்

5. ‘இந்தியன் – 2 & 3’ ‘லால் சலாம், ‘வேட்டையன்’, ‘விடா முயற்சி’, ‘அச்சம் என்பது இல்லையே’, மலையாளத்தில் மோகன்லாலின் ‘லூசிஃபர்-2’, அல்போன்ஸ் புத்திரன் டைரக்ஷனில் ஒரு படம், விஜய்யின் மகன் சஞ்சய் டைரக்ஷனில் ஒரு படம் என வரிசை கட்டி நிற்கின்றன லைக்கா சுபாஸ்கரனின் தயாரிப்புகள். இதற்காக இரண்டாயிரம் கோடிக்கு மேல் இறக்கியிருக்கிறார் சுபாஸ்கரன்.

சுபாஸ்கரன்
சுபாஸ்கரன்

6. சூர்யாவின் ‘2D எண்டெர்டெயின்மெண்ட்’ தயாரிப்புகளிலேயே அதிகளவு செலவாகியிருப்பது ‘கங்குவா’ படத்திற்குத்தானாம். கூட்டுத் தயாரிப்பாளராக தனது உறவினர் ‘ஸ்டுடியோ க்ரீன்’ ஞானவேல் ராஜா இருப்பதால் தெம்பாக இருக்கிறார் சூர்யா.

நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா

7. ‘ஜப்பான்’ சறுக்கல் கவலையிலிருந்து மீண்டுள்ள கார்த்தி, இப்போது நலன் குமாரசாமி டைரக்ஷனில் உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் நடித்து வருகிறார். அடுத்ததாக ’96’ பிரேம் குமார் படம், பி. எஸ். மித்ரனின் ‘சர்தார்-2 ‘ என பிஸியாக இருக்கிறார் கார்த்தி.

கார்த்தி
கார்த்தி

8. கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி டைரக்ஷனில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். நீண்ட கால தயாரிப்பு, அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ‘அயலான்’ படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணும் முயற்சியின் முன்னோட்டமாக படத்தின் டிரெயிலரை ரிலீஸ் பண்ணியுள்ளார் எஸ்.கே.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

9. சத்யஜோதி பிலிம்ஸின் ‘கேப்டன் மில்லர்’ படம் பொங்கலுக்கு ரிலீஸ் என இப்போது வரை நம்பிக்கையுடன் இருக்கிறார் ஹீரோ தனுஷ். அதனால் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தனது 50 -ஆவது படத்தை டைரக்ட் பண்ணி ஹீரோவாக நடிக்கும் வேலைகளில் தீவிரமாக இறங்கியிருக்கார் தனுஷ்.

தனுஷ்
தனுஷ்

10. ‘விடுதலை -2’-க்காக கடும் உழைப்பைக் கொடுத்துவருகிறார் டைரக்டர் வெற்றிமாறன். இதில் விஜய் சேதுபதியின் போர்ஷன் அதிகமாகப் போனதால் ‘விடுதலை -3’ ஆம் பாகம் கூட வர வாய்ப்புள்ளது.

சூரி-வெற்றிமாறன்-விஜய்சேதுபதி
சூரி-வெற்றிமாறன்-விஜய்சேதுபதி

11. ‘தங்கலான்’ படம் சர்வதேச அளவில் நிச்சயம் அதிர்வலைகளை உருவாக்கும் என்ற திடமான நம்பிக்கையில் இருக்கிறார்கள். டைரக்டர் பா.இரஞ்சித்தும் ஹீரோ ‘சீயான்’ விக்ரமும்.

பா.இரஞ்சித் - 'சீயான்' விக்ரம்.
பா.இரஞ்சித் – ‘சீயான்’ விக்ரம்.

12. மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கும் ‘ வாழை’ படத்தை ரெட் ஜெயண்ட் மூவில் ரிலீஸ் பண்ணுகிறது. அடுத்து துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் படத்தை டைரக்ட் பண்ணுகிறார் மாரிசெல்வராஜ்.

துருவ் விக்ரம் - மாரிசெல்வராஜ்
துருவ் விக்ரம் – மாரிசெல்வராஜ்

13. லைக்கா சுபாஸ்கரனுக்குப் போட்டியாக கோலிவுட்டில் களம் இறங்கியுள்ளார் பிடிஜி யுனிவர்ஸ் பாபி பாலசந்திரன். 12 -க்கும் மேற்பட்ட நாடுகளின் உளவு அமைப்புகளுக்கு சாஃப்ட்வேர் சப்ளை செய்யும் கம்பெனியை நடத்தி 15 ஆயிரம் கோடிக்கு அதிபதியாக உள்ள பாபி பாலசந்திரனின் முதல் தயாரிப்பு ‘டி மாண்டி காலனி-2’. அடுத்து ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்’ என்ற படத்தையும் தயாரித்து முடித்துள்ளது பி.டி.ஜி யுனிவர்ஸ்,

பிடிஜி யுனிவர்ஸ் பாபி பாலசந்திரன்
பிடிஜி யுனிவர்ஸ் பாபி பாலசந்திரன்

14. டிசம்பர் இறுதியில் ரிலீசானது ‘பார்க்கிங்’ படம். 6 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு 18 கோடி கலெக்க்ஷன் பண்ணியதால் வெரிஹேப்பியாக இருக்கிறார்கள் தயாரிப்பாளர் பேஸன் ஸ்டூடியோ சுதன் சுந்தரமும் ஹீரோ ஹரீஷ் கல்யாணும்.

 ஹரீஷ் கல்யாண்
ஹரீஷ் கல்யாண்

15. ‘அயலான்’ படத்தை அண்டர்டேக் பண்ணியுள்ள கேஜேஆர் ஸ்டுடியோஸ் கே.ஜே.ராஜேஷுக்கு கடன் பிரச்சனை வழக்கு சிக்கல் கோர்ட்டில் இருந்தாலும் படத்தை பொங்கலுக்கு கொண்டு வந்துவிடலாம் என்ற நம்பிக்கை சிவகார்த்திகேயனுக்கு உள்ளது. இதனால் தான் கடந்த 26-ஆம் தேதி, தனது ரசிகர்கள் முன்னிலையில் ‘அயலான்’ முன்னோட்ட விழாவை பிரம்மாண்டமாக நடத்தினார் எஸ்.கே.

Ayalaan (2024)
அயலான்

16. அமீரின் ‘மாயவலை’ ஜனவரியில் ரிலீசாகிறது. இதன் வேலைகள் முடிந்த பின் தான் ‘இறைவன் மிகப்பெரியவன்’ முதல் கட்ட ஷூட்டிங்கை முடித்து ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் பண்ணினார் அமீர். இப்படத்தின் கதையை வெற்றி மாறன் & தங்கம் ஆகியோர் இணைந்து எழுதியிருப்பதால் இப்படத்தின் மிகப் பெரிய நம்பிக்கை வைத்துள்ளார் அமீர்.

அமீர்
அமீர்

17. ராம் டைரக்க்ஷனில் தான் தயாரித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படம் பெர்லின் திரைப்பட விழாவில் ‘பிக்ஸ்கிரீன்’ பட்டியலில் இடம் பிடித்துள்ளதால் செம மகிழ்ச்சியில் உள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. 2024-ல் ஒரு படத்தை டைரக்ட் பண்ணி தயாரிக்கும் முடிவில் உள்ளாராம் சுரேஷ் காமாட்சி.

சுரேஷ் காமாட்சி
சுரேஷ் காமாட்சி

18. தனது நண்பர்களுக்காகவும் தன்னிடம் பணியாற்றும் உதவி இயக்குனர்களை இயக்குன ராக்குவதற்காகவும் ‘ ஜிஸ்குவாட்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார் டைரக்டர் லோகேஷ் கனகராஜ். இவரின் முதல் ரிலீஸ் ‘ஃபைட் கிளப்’ . 2025-ல் விஜய்யின் கால்ஷீட் வாங்க ட்ரை பண்ணுகிறார் லோகேஷ் கனகராஜ்.

விஜய் - லோகேஷ் கனகராஜ்
விஜய் – லோகேஷ் கனகராஜ்

19. தனது கனவர் மற்றும் குழந்தைகளுடன் கிறிஸ்துமஸை ஹேப்பியாக கொண்டாடிய நயன்தாரா இந்த ஆண்டிலிருந்து தமிழ், மலையாளப் படங்களைத் தயாரிப்பதில் தீவிரம் காட்டப் போகிறாராம்.

விக்னேஷ் சிவன் -நயன்தாரா
விக்னேஷ் சிவன் -நயன்தாரா

20. தன்னுடைய திருமண வேலைகள் காரணமாக, சினிமா பி. ஆர், ஓ, பணிகளில் இருந்து ஒதுங்கியிருந்தார் பிரியா. இப்போது மீண்டும் களத்தில் பிஸியாகி ஸ்ரேயா சரண், தான்யா ஹோப், ஷ்ரத்தா ஷிவதாஸ், மனிஷா யாதவ், மரியா வின்சென்ட், மாளவிகா சர்மா உட்பட முன்னணி ஹீரோயின்களுக்கு பி.ஆர்.ஓ. பணியை சின்ஸியராக செய்து வருகிறார். பிரியா.

 பி. ஆர், ஓ பிரியா
பி. ஆர், ஓ பிரியா

21. கொரோனாவின் பிடியிலிருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை கொடுத்துக் காப்பாற்றியவர் சித்த மருத்துவர் வீரபாபு. இவர் நடித்து தயாரித்து டைரக்ட் பண்ணியுள்ள ‘முடக்கறுத்தான்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு சினிமாவின் முன்னணி பிரபலங்கள் பலர் வந்திருந்து டாக்டர் வீரபாபுவின் தொண்டுள்ளத்தைப் பாராட்டினார்கள்.

வீரபாபு
வீரபாபு

22. காதல் முறிவு, நிச்சயதார்த்த முறிவு ஏற்பட்டதால் மனம் சோர்ந்து போயிருந்த த்ரிஷா, இந்த ஆண்டுக்குள் தனக்கு ‘செட்’ ஆகும். தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளாராம். இதற்கான ஏற்பாடுகளைச் செய்பவர் ரம்யா கிருஷ்ணன்.

த்ரிஷா
த்ரிஷா
வட்டார வழக்கு..
வட்டார வழக்கு..

23. இந்த ஆண்டு ரிலீசாகப் போகும் ‘விடுதலை – 2’ மற்றும் ‘கூழாங்கல்’ வினோத்ராஜின் ‘கொட்டுக்காளி’ ஆகிய இரண்டு படங்களும் சூரியின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படங்களாக அமையும்.

சூரி
சூரி

24. முன்னணி ஹீரோயின்களுக்கு டப்பிங் குரல் கொடுப்பவர் ரவீனா.

ரவீனா
ரவீனா

இவர் ஹீரோயினாக நடித்து டிசம்பரில் ரிலீசான ‘வட்டார வழக்கு’ படத்தில் தெக்கத்திப் பெண்ணாக நடித்து அசத்தியிருந்தார். வருசத்துக்கு 3 படம் நடிச்சாலும் நச்சுன்னு இருக்கணும் என்ற ஆசையில் இருக்காராம் ரவீனா.

Leave A Reply

Your email address will not be published.