திருச்சியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் 35 பேருக்கு சாதனை பெண்கள் விருது….
திருச்சியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் 35 பேருக்கு சாதனை பெண்கள் விருது….
திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை , ரோட்டரி மாவட்டம் 3000 மற்றும் ஹோலி கிராஸ் கல்லூரியின் சமூக பணித்துறை இணைந்து பல்வேறு துறையில் சாதித்த பெண்களுக்கு சாதனைப் பெண்கள் விருது வழங்கியது . ஆண்டுதோறும் ஜோசப் கண் மருத்துவமனை சார்பாக பல்வேறு துறை சார்ந்த பெண்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த வருடம் இதற்கான விழா ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரதீபா தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக ரோட்டேரியன் டாக்டர் ஜமீர் பாட்ஷா, சகிலா ஜமீர் பாட்ஷா, ரோட்டரி மாவட்டம் 3000 மீடியா பப்ளிசிட்டி ஆபிஸர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஹோலி கிராஸ் கல்லூரி முதல்வர் இசபெல்லா ராஜகுமாரி , ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுதா பிரபு , ஹோலி கிராஸ் கல்லூரி சமூக நலத்துறை தலைவி அனிதா ஆகியோர் ஏற்பாட்டில் நடந்த இந்த நிகழ்ச்சியில் டாக்டர் உமா வைத்தியநாதன், அருட் சகோதரி ஜோசப்பின் சின்னராணி, சாக்சீடு இயக்குனர் பரிமளா சேவியர், காவல்துறை உதவி ஆணையர் யாஸ்மின், பேராசிரியர் அமுதா, தொழில் முனைவர் சங்கீதாவழக்கறிஞர் ஹனிஃபா பீ உட்பட 35 பெண்களுக்கு சாதனை பெண்கள் விரைவில் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்…