பிரதம மந்திரி தேசிய இன்டர்ன்ஷிப் திட்டம் குறுகிய கால திறன் பயிற்சிக்கு பதிவு !
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பாக முன்னணி நிறுவனங்களில் ஊக்கத் தொகையுடன் கூடிய வேலை வாய்ப்பு பயிற்சி அளிக்கும் பிரதம மந்திரி தேசிய இன்டர்ன்ஷிப் திட்டத்தில் குறுகிய காலதிறன் பயிற்சிக்கு பதிவு செய்யும் முகாம் 11.03.2025 அன்று திருச்சி மாவட்டதிறன் பயிற்சி அலுவலகத்தின் மூலமாக நடைபெறவுள்ளது.
பிரதம மந்திரி தேசிய இன்டர்ன்ஷிப் திட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு இந்திய அளவில் 500 முன்னணி நிறுவனங்களில் 12 மாதம் வேலை வாய்ப்பு பயிற்சி (இன்டர்ன்ஷிப்) வழங்க திட்டமிட்டுள்ளது. 5 ஆண்டுகளில் 1 கோடி இளைஞர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இத்திட்டதின் கீழ் திருச்சி மாவட்டத்தில் உள்ள முன்னணி நிறுவனங்கள் வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கும் பொருட்டு பதிவு செய்துள்ளன.

இந்த திட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பதிவு செய்யும் பொருட்டு 11.03.2025 அன்றுதிருவெறும்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தகுதிவாய்ந்த இளைஞர்களைபதிவு செய்யும் முகாம் காலை 10.00மணிமுதல் மாலை 4.00 மணிவரை நடைபெறவுள்ளது.
எனவே படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் கல்விச்சான்றிதழ்கள், ஆதார், வங்கி கணக்கு புத்தகம் மற்றும் தொலைபேசியுடன் கலந்து கொண்டு நல்ல இந்த வாய்ப்பினைபயன்படுத்திக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இப்பயிற்சிக்கு 21 வயது முதல் 24 வயதுள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம. குடும்பவருமானம் ஆண்டுக்கு 8 இலட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரோ, விண்ணப்பதாரரின் பெற்றோரோ, விண்ணப்பதாரரின் கணவன் அல்லது மனைவியோ மத்திய மற்றும் மாநில அரசின் கீழ் பணிபுரிபவராக இருத்தல் கூடாது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மேலும் முழு நேரபணியாளர்கள் மற்றும் தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவ மாணவிகள் NAPS மற்றும் NATS திட்டத்தின்கீழ் தொழிற் பழகுநர் பயிற்சி பெற்றவர்கள் மத்திய மாநிலஅரசின் கீழ் தொழிற் பழகுநர் பயிற்சி பெற்றுவருபவர்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க இயலாது.
மேலும் இப்பயிற்சி காலத்தில் மாதாந்திர உதவித்தொகையாக ரூ.5000ஃ- மற்றும் தற்செயலான செலவுகளுக்கு ஒருமுறைமட்டும் ரூ.6000ஃ- வழங்கப்படும். இப்பயிற்சியில் சேர விரும்புவோர் www.pminternship.mca.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு94436 44967 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமார்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.