சைடிஷ் சாப்பிட்டதில் தகராறு ஒருவருக்கு கத்திக்குத்து 4 பேர் மீது வழக்கு – திருச்சியில் பயங்கரம்

0

சைடிஷ் சாப்பிட்டதில் தகராறு ஒருவருக்கு கத்திக்குத்து 4 பேர் மீது வழக்கு – திருச்சியில் பயங்கரம்

திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட டி மார்ட் வணிக வளாகம் அருகே சில்லி சிக்கன் கடை நடத்தி வருபவர் ரிஸ்வான். இவர் சம்பவத்தன்று 2/1/2021 இரவு 10.30 மணி அளவில் தனது கடையினை மூடிவிட்டு வீட்டிற்கு செல்ல இருந்த நேரத்தில் அப்போது தங்களுக்கு உடனடியாக சிக்கன் சாப்பிட வேண்டும் என்று மிரட்டியபடி நான்கு பேர் ரிஸ்வானிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் அவர்களுக்கு சிக்கன் சாப்பிட தயார் செய்து கொடுத்த பிறகு அவர்கள் சாப்பிட்டதற்கு பணம் அளிக்காமல் கிளம்பியுள்ளனர் உடனே ரிஸ்வான் கேட்டதற்கு அவரை அடித்ததுடன் கடையையும் நொறுக்கியுள்ளனர் அந்த நான்கு நபர்கள்.

இத்தகவலை கேட்ட ரிஸ்வானின் சகோதரர் இம்ரான் அந்த நான்கு பேரிடம் எதற்காக இப்படி செய்தீர்கள் என்று கேட்க சென்றதற்கு அந்த நான்கு பேர் கொண்ட கும்பல் இம்ரானை கத்தியால் குத்தி விரட்டியுள்ளனர். இதுதொடர்பாக காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசாரிடம் ரிஸ்வான் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை தொடங்கியதில் சமயபுரம் பகுதியை சேர்ந்த சுரேந்திர பாபு, சிலம்பரசன், மார்க்கெட் பகுதியை சேர்ந்த மணிகண்டன், சதீஷ்குமார் என தெரியவந்தது. அதன் அடிப்படையில் அந்த 4 பேரையும் போலீசார் பிடித்து விசாரித்ததில் அவர்கள் 4 பேரும் அப்பகுதியில் உள்ள குதிரை வளர்ப்பு கொட்டாயில் வேலை பார்த்து வருவதாகவும் மது அருந்திவிட்டு சைடிஷ் எங்கும் கிடைக்காததால் சிக்கன் கடைக்கு சிக்கன் சாப்பிட வந்ததாக கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக காந்தி மார்க்கெட் போலீசார் சம்பந்தப்பட்ட 4 பேர் மீதும் வழக்குப் பதிந்து உள்ளனர்.

*ஜித்தன்*

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.