பதுக்கப்பட்ட 4000 போதை மாத்திரைகள் ! வளைத்து பிடித்து போலீஸ்!
திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி,இ.கா.ப., அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்கள்.
25.11.2025-ந்தேதி, ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீரங்கம் பஞ்சக்கரைரோடு சுண்ணாம்பு கால்வாய் அருகில் இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதை மாத்திரைகள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஸ்ரீரங்கம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்கள், சம்பவ இடத்தில் இருந்த 2 நபர்களை பிடித்து விசாரணை செய்ததில், மருந்துவ பிரதிநிதி (Medical Representative) வெங்கடேஷ் 25/25 த.பெ.ராஜ்குமார் என்பவர் போதை மாத்திரைகள் வாங்கி, 1.கேசவராஜ் 24/25 த.பெ.செல்வராஜ், 2.சதீஸ்குமார் 26/25 த.பெ.சங்கரமூர்த்தி, ஸ்ரீரங்கம் காவல் நிலைய HS 3.கொக்கரகோ பிரசாத் 24/25 த.பெ.கருணாநிதி 4.கண்ணன் 28/25 த.பெ.பாலமுருகன் ஆகியோர்களிடம் கொடுத்து, திருச்சி மாநகரில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
சம்பவ இடத்தில் இருந்த வெங்கடேஷ் மற்றும் சதீஸ்குமார் ஆகியோர்கள் பிடித்தும், அவர்களிடமிந்து 4000 போதை மாத்திரைகள் (மதிப்பு சுமார் ரூ.1,62,000/-) போதை மாத்திரைகள், ஊசிகள்_(Syringes) மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. வழக்கில் தொடர்புடைய எதிரிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வெங்கடேஷ் மற்றும் சதீஸ்குமார் ஆகிய 2 எதிரிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய மற்றும் சிலரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

மேலும் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவர்களை பிடித்த ஸ்ரீரங்கம் காவல் ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்களை காவல் ஆணையர் ந.காமினி., இ.கா.ப., வெகுவாக பாராட்டினார்கள்.
மேலும் திருச்சி மாநகரத்தில், இளைஞர்களின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் போதை பொருட்களான கஞ்சா, குட்கா பொருள்கள் மற்றும் போதை ஊசி, போதை மாத்திரைகள் விற்பனை செய்யும் சமூகவிரோதிகள் மீது கடுமையான சட்டரீதியான நடவடிக்கைகள் தெடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.








Comments are closed, but trackbacks and pingbacks are open.