5000 ஏக்கர் நிலங்கள் வறட்சியில் வாடும் அவலம்.. கூட்டுறவுத்துறை அமைச்சரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை..! வேதனையில் கதறும் விவசாயிகள்…!
5000 ஏக்கர் நிலங்கள் வறட்சியில் வாடும் அவலம்.. கூட்டுறவுத்துறை அமைச்சரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை..! வேதனையில் கதறும் விவசாயிகள்…!
தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் விவசாயிகள் தங்களுடைய சொந்த நிலங்களில் போர் போட்டு குழாய்கள் அமைத்து பைப் லைன் மூலமாக தங்களுடைய விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்கள் உடைப்பு
சின்னமனூர் சுற்றுவட்டார பகுதியில் ஆயிரம் அடி போர் போட்டு தண்ணீர் இல்லாத காரணத்தால் வங்கிகள் மூலம் கடன் பெற்று கந்து வட்டிக்கு பணம் வாங்கிய பயிர் பல ஆயிரம் ஏக்கர் விவசாய பயிர் நாசம்.
பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை,மின்சார வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளின் துணையோடு விவசாயிகளின் 47 பைப் லைன் தண்ணீர் கொண்டு செல்லும் பைப் லைன்கள் உடைக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், சின்மைனூர் பகுதியில் கடந்த மாதம் எந்த விதமான முன்னறிவிப்பின்றி 47 விவசாய பைப்புகள் உடைக்கப்பட்டது.
ஒவ்வொரு பைப் லைனும் 20 முதல் 30 விவசாயிகள் ஒன்று சேர்ந்து ஓடைப்பட்டி, ஏரசை, வெள்ளையம்மாள்புரம், உள்பட பல ஊர்களை சேர்ந்தவர்கள் பைப் லைன் அமைத்துள்ளனர்.
இந்த பைப் லைன் உடைக்கப்பட்டுள்ளதால் வாழை தென்னை திராட்சை, உள்ளிட்ட 5000 ஏக்கர் விவசாய பயிர்கள், தண்ணீரின்றி காய்ந்து, விவசாய நிலங்கள் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக வறட்சியால் பயிர்கள் வாடி வருவதால், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால், சென்னை தலைமைச் செயலகத்தில், அனைத்து அமைச்சர்கள், அதிகாரிகளை சந்தித்து முறையிட்டும் இதுவரை எந்தவிதமான முடிவும் எட்டப்படவில்லை.
மேலும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி தேனிக்கு வருகை தந்து கடந்து 4 தேதி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் நிதி அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி உரிய தீர்வு கிடைக்காத காரணத்தால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்,
தற்போது டேங்கர் லாரிகள் மூலமாக தண்ணீர் வாங்கி விவசாயம் செய்து வருகிறோம்.
சின்னமனூர் அதன் சுற்று வட்டாரப் பகுதி 5000 ஏக்கர் விவசாய பயிர்கள் தண்ணீரின்றி வாடி கருகி வருகிறது. இதனால் மிகுந்த மன வேதனை அடைந்து வருகின்றனர்.