சேலம் அருகே பெருமாள் கோயிலில் 8 ஐம்பொன் சிலைகள் கொள்ளை!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் தாரமங்கலத்தில் உள்ள சாவடி தெற்கு மாசி வீதியில் அமைந்துள்ள பூவேல்நாடு மகாஜனத்திற்கு சம்பந்தப்பட்ட பிரசித்தி பெற்ற பெருமாள் கோவிலில் பழங்கால ஐம்பொன் சிலைகளான ஸ்ரீதேவி, பூதேவி,மூலவரான பெருமாள் மற்றும் உற்சவ மூர்த்திகள் உள்ளிட்ட எட்டு சிலைகள் நேற்று இரவு கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

உலகில் No1 ரோட்டரி இந்தியா-Vision 2030 மூலம் மாற்றும் திட்டம்-MMM முருகானந்தம் தகவல்

இன்று வழக்கம் போல் காலை கோவிலில் பூஜைகள் செய்வதற்காக பூசாரி வந்த போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த எட்டு ஐம்பொன் சாமி சிலைகள் காணாமல் இருந்தது தெரியவந்தது.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

இதனை அடுத்து தாரமங்கலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு,சம்பவ இடத்திற்கு ஓமலூர் துணை கண்காணிப்பாளர் சங்கீதா,ஆய்வாளர் தொல்காப்பியன் தலைமையில் காவல்துறையினர் விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள தாரமங்கலம் பகுதியில், பழங்கால எட்டு ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தங்க மயில் - Akshaya Tritiya Specials at Thangamayil | Golden Offers | Thangamayil Jewellery Limited

சிற்பக் கலைகளுக்கு உதாரணமாக திகழும் தாரமங்கலம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் அருகே இந்த பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு நேற்று இரவு நடைபெற்ற ஐம்பொன் சிலை கொள்ளை சம்பவம் பக்தர்கள் மத்தியில் வரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

-சோழன் தேவ்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.