துறையூரில் பரபரப்பு 8 லட்சம் மதிப்புள்ள குட்கா – பான் மசாலா
துறையூரில் பரபரப்பு 8 லட்சம் மதிப்புள்ள குட்கா – பான் மசாலா பறிமுதல் ..
திருச்சி மாவட்டம்,துறையூரில் 8 லட்ச ரூபாய் மதிப்புள்ள 826 கிலோ அளவிலான , தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா , புகையிலைப் பொருட்கள் பறிமுதல்.
திருச்சி மாவட்டம் துறையூர் தெப்பக்குளம் அருகே ஒரு பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா , புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்தரகசிய தகவலின் படி திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரியான ரமேஷ் பாபு தலைமையில் அதிகாரிகள் ,இன்று காலை நேரில்சென்று ஆய்வு செய்தனர்.
அப்பொழுது தெப்பக்குளம் அருகே பாலாஜி என்பவரது கடையில் 20 பாக்கெட் குட்கா பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. மேலும் அவரிடம் விசாரணை செய்ததில் கடைக்கு அருகே இருந்த ஒரு குடோனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது.
இது பற்றி மேலும் விசாரணை செய்ததில் , தெப்பக்குளம் பகுதியில் உள்ள பர்வீன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் உத்தம்சிங் என்பவர் வாடகைக்கு வீடு எடுத்து , அதனை குடோனாக மாற்றி , அதனுள்மூட்டை, மூட்டையாக தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை உள்ளிட்ட பொருட்களை வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து சுமார் 826 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களைபறிமுதல் செய்தனர் .இதன் மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் ஆகும்.இதனையடுத்து குட்கா பொருட்கள் மற்றும் அதனை விற்பனை செய்ததாக உத்தம்சிங் மற்றும் பாலாஜி என்பவரை துறையூர் போலீசார் வசம் ஒப்படைத்தனர்.துறையூரில் நகரப் பகுதியில் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .