அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக … அரசு அதிகாரியான ஆஸ்தான ஜோதிடர் !

திருச்சியில் அடகு நகையை விற்க

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத முற்றிலும் புதிய நடைமுறையாக, முதல்வர் ச.ஜோசப் விஜயின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலை நியமனம் செய்வதாக முதன்மை செயலாளர் உத்தரவிட்டிருப்பது, தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது.
சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஜோதிடம் மற்றும் எண் கணிதத்தில் ஈடுபாடு கொண்டு இயங்கிவருபவர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆன்மீக ஆலோசகராக இருந்தவர். தற்போது, விஜயின் ஆஸ்தான ஜோதிடராக அவருடனே வலம் வந்தவர். விஜயின் ஜாதகம் வலிமையானது என்றும்; தமிழக அரசியலில் சுனாமி போன்ற மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும்; 140 முதல் 170 இடங்களை பிடிக்கும் என்றும் முன்கூட்டியே கணித்தவர்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இவரது ஆலோசனையின்படிதான், வாக்கு எண்ணிக்கைக்கு முதல்நாள் திருச்செந்தூரில் சிறப்பு யாகத்தை விஜய் நடத்தியிருந்தார். அப்போது இவரும் உடனிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பின்னணியில்தான், தற்போது அரசு பதவியில் அதிகாரப்பூர்வமாக அமர்த்தப்பட்டிருக்கிறார்.
முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரி பதவி என்பது அரசியல் மற்றும் நிர்வாக ஒருங்கிணைப்பை முக்கிய கடமைகளாக கொண்டது. ஒரு ஜோதிடர் ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு என்ன அரசியல் ஆலோசனையை வழங்கிவிடப்போகிறார்? ஆன்மீக ஆலோசகர் என்று அமர்த்திக்கொள்ள சட்டத்தில் இடமில்லை என்பதால் இந்த ஏற்பாடாக இருக்குமோ? மாற்றம் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். ஆட்சியைத்தான் ச.ஜோசப் விஜய் நடத்தி வருகிறார் என்ற விமர்சனம் முன் எழுந்திருக்கிறது.
முதல்வராக பதவியேற்ற நாளில் அவர் ஆற்றிய முதல் உரையில், நான் மக்கள் பணத்திலிருந்து ஒற்றை ரூபாயைக்கூட தொட மாட்டேன் என்று வீராவேசமாக பேசியவர், இப்போது தனது ஆஸ்தான ஜோதிடரை அரசு அதிகாரியாக அதுவும் அரசு செலவிலேயே உடன் வைத்துக் கொள்வது எந்த இனத்தில் சேரும் என்ற கேள்விழும் எழாமலில்லை.
– அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.