அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

எப்போதும் இளமையாக இருக்க வேண்டுமா?

வாழ்க்கை வாழ்வதற்கே - 18

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

1. தினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளை சாப்பிடுங்கள். இருதயத்துக்கு ஆரோக்கியம் அளிக்கும் நல்ல கொழுப்பு, ஒட்டுமொத்த நலத்தைக் காக்கும் `செலினியம்’ ஆகியவை கொட்டை வகை உணவுகளின் சொத்து. ஆயுளில் மூன்றாண்டுகளை அதிகரிக்கும் என்கிறார்கள் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்.
2. வாரத்தில் இருமுறை மீன் இருக்கட்டும். இரண்டில் ஒன்று எண்ணை வகை மீனாக இருந்தால் நல்லது. கொலஸ்ட்ராலை குறைத்து, இருதய நோய் அபாயத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய `ஒமேகா 3 பேட்டி ஆசிட் எண்ணை செறிந்த மீன்களில் அதிகம் உள்ளது.
3. சாப்பாடுகளுக்கு இடையே 3 மணி நேர இடை வெளி அவசியம். மூன்று பிரதான உணவுகளில் காலை உணவை முழுமையாக சாப்பிடுங்கள். காலை உணவும், இரவு உணவும் 11 மணியைத் தாண்ட வேண்டாம். அதிக பசியின்போது நீங்கள் அதிகமாகச் சாப்பிட்டு விடுவீர்கள்.
4. தினசரி 8 கப் திரவம் குடிப்பது அவசியம். ஆனால் அது எல்லாம் தண்ணீராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. டீ, காபியும் இதில் இடம்பெறலாம். அளவாக காபி பருகுவது, சர்க்கரை நோய், உணவுக் குழாய் கேன்சர், ஈரல் நோய்களைத் தடுக்கும் என்பது ஆய்வாளர்கள் கருத்து. சாதாரணமாக
5. தொடர்ந்து குளிர்பானம் பருகுவது தொப்பைக்கு ஒரு முக்கியக் காரணம். இதில், 10 சதவீத சர்க்கரை உள்ளது.
6. காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவது ஆரோக்கிய வாழ்வுக்குவுக்கு அடித்தளமிடும். ஒவ்வொரு வண்ண காய்கறி, பழங்களும் வெவ்வேறு வகையான `ஆண்டி ஆக்ஸிடன்ட்களை’ கொண்டிருக்கின்றன. பழங்கள், காய்கறிகளில் உள்ள `ஆண்டிஆக்ஸிடன்ட்கள்’ கேன்சர், இருதய நோய்கள் போன்ற மோசமான நோய்களைத் தடுக்கும். நோய்த்தொற்றுக்கு எதிராக இருக்கும். காய்கறிகள் அதிகமான நார்ச்சத்தையும், குறைவான சர்க்கரைச் சத்தையும் கொண்டுள்ளன.
7. வயதுக்கு வந்தவர்கள் தினமும் 6 கிராமுக்கு மேல் உப்பு சேர்க்கவேண்டாம். சமையல் செய்யும் போதுமட்டும் உப்பை சேர்க்கவேண்டும். பிரெட், `பேக்கிங் உணவு’ வகைகளில் அதிக உப்பு மறைந்திருக்கிறது என்பதை உணருங்கள்.
8. சராசரியாக பெண்கள் மாவுச்சத்து உணவுகளை சாப்பிட வேண்டும். பெண்கள் இரும்புச் சத்து செறிந்த உணவுகளை உங்கள் உணவில் தினசரி சேர்த்துக்கொள்ளுங்கள்.
9. நீங்கள் ஒருமுறை உணவை விழுங்கும்முன்பு 15 முறை மெல்ல வேண்டும். நாம் சராசரியாக 7 முறைதான் உணவை மெல்கிறோம்.
10. பால் சார்ந்த உணவு வகைகளில் ஒவ்வொரு வாரமும் உங்கள் உணவுப் பட்டியலில் இருப்பது கட்டாயம். தினசரி மூன்று வகையான பால் சார்ந்த உணவுப் பொருட்களை சாப்பிடுங்கள்.
—  பேரா. சா.அருள்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.