சுயநலமில்லாமல் பொதுநலம் என்ற ஒன்று இல்லை !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

காலையில் எழுந்தால் சுடச்சுட காபி இருக்கும், டிபன் இருக்கும், மதிய உணவு எடுத்துச் செல்ல தயாராக இருக்கும். போட்டுக்கொள்ள வேண்டிய துணிகள் துவைத்து இஸ்தரி போட்டு தயாராக இருக்கும். மாலை வந்தால் இதே ரொடீன்… என்று நாம் அவரை கவனிப்போம் தெரியுமா? நம் சௌகரியங்கள் என்றாவது குறையும் போது, ஒரு நாள் காபி வராத போது, ஒரு நாள் லஞ்ச் தயாராக இல்லாத போது! அன்றும் பலருக்கு ஐயோ அம்மாவுக்கு என்ன ஆனது என்ற எண்ணத்தைவிட ஐயோ நமக்கான சௌகரியங்கள் குறைகிறதே என்ன எரிச்சல் தான் வரும்! அது அவர்களின் தவறு மட்டுமல்ல அந்த அம்மாவின் தவறும் கூட. தனக்கான எந்தவொரு சௌகரியத்தையும் அலட்சியப்படுத்திவிட்டு மற்றவருக்கு அசௌகரியமாக எதுவும் ஆகிவிடக் கூடாதே என்று உழன்று கொண்டிருந்தால் இது தான் நடக்கும். அவர்கள் தங்கள் தேவைகளின் பூர்த்திக்கு பழகிவிட்டார்கள். இதற்குப் பின்னால் ஒருவரின் இருப்பு அவர்களுக்கு மறந்துவிடுகிறது.

இது ஒரு உதாரணம் தான். இம்மாதிரி பல விஷயங்களில், பல விதமான உறவுகளில் பல மனிதர்களை நாம் சாதாரணமாக (அலட்சியமாக) எடுத்துக்கொள்கிறோம்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

அவர்களின் அசௌகரியங்கள் நம் கண்களுக்கு புலப்படுவதேயில்லை நம் சௌகரியங்கள் காக்கப்படும் வரை. எப்படி ஒரு அம்மா எத்தனை தலைவலித்தாலும், தன் உடம்பு ஓய்வுக்காக எத்தனை கெஞ்சினாலும் யாரிடமும் சொல்லாமல் அந்த உடலும் மனமும் இனி எங்களால் ஆகாது என்று படுக்கையில் கிடத்தும்வரை போராடுகிறாளோ அதே போல் தான் நிறைய உறவுகளில் வேறு வேறு பரிமாணங்களில் இந்த taken for granted தன்மை புகுந்துகொள்கிறது!

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

ஒரு உறவில், அது எந்த உறவாக இருப்பினும் முதலில் அந்த உறவு தழைக்க நாமும் முக்கியம் என்ற தெளிவு வேண்டும். இங்கு தியாகங்கள் முக்கியமில்லை. நேர்மைதான் முக்கியம். ஒன்று நம்மால் செய்ய இயலவில்லையெனில் அதை நேராக சொல்லும் நேர்மை வேண்டும். அதை மற்றவர் உணர்ந்து அந்த இடத்தை நமக்கு அளிக்கிறாரா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி மதிக்காத மனிதராக இருப்பின் ஒரு சக்கரத்தில் ஒரு வண்டி ஓடாது என்ற புரிதல் வேண்டும்.

நம் வாழ்வு நன்றாக இருக்க வேண்டும் என்றால் அவ்வப்போது நமக்கான இடத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். நமக்கான எல்லைகளை வகுத்துக்கொள்ள வேண்டும். இது சுயநலம் என்று நினைப்பவர்கள், சுயநலமில்லாமல் பொதுநலம் என்ற ஒன்று இல்லை என்பதை உணர்தல் வேண்டும்.

தியாகியாக தன்னை உணர்ந்து வாழ்ந்தவர்கள் பிற்காலத்தில் சுயபச்சாபத்தில் உழல்வதை பார்த்துக் கொண்டேயிருக்கிறேன். இல்லையெனில் திடீரென  மற்றவர்மேல் வெறுப்பை உமிழத் தொடங்குவதையும் பார்க்கிறேன். இவையெல்லாம் அவசியமா?

—   லதா

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.