சிறுமிகளின் சதை வியாபார சதுரங்க வேட்டை !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

சிற்றின்பத்திற்கு அடிமையாகி சிறுமிகளை சிதைத்து சறுக்கி  விழுந்த ஒரு வர்த்தக ஜாம்பவானின் வரலாற்றை தான் இன்று வருத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்  வலைதளங்களில்.

THE GREAT GRANITE KING  என்று உலக அரங்கில் அத்தனை பிரபலமானது இந்த வெற்றி வீரரின் பெயரும், அவரது வர்த்தக சாம்ராஜ்யமும். தலைமுறைகளுக்கு முன்னால் விகடனில் இவர் எழுதிய வெற்றி படிக்கட்டுகள் என்ற தொடர் , பல இளைஞர்களுக்கு வேத வாக்கியமாக இருந்தது அன்று. அப்படி  பாடுபட்டு சேர்த்த அத்தனை பெருமைகளும் ஒரே நாளில் படுகுழியில் புதைந்து போனது இவரது சிற்றின்ப சபலத்தால்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

வீரமணி
வீரமணி

மக்களை பாதுகாத்து அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டிய அதிகார வர்க்கமே இந்தப் பாலியல் கொடுமைக்கு பக்கத்துணையாக இருந்தது தான் கொடுமையின் உச்சகட்டம் என்கிறார்கள்.  இதில் ஊடகங்களின் கைங்கரியமும் கணிசமாக இருக்கும் என்று கணிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

கூட இருந்தே குளிர் காய்ந்தவர்களால் தான் இந்த கொடுமைகளும் அவரது அந்தரங்கங்களும் இன்று அரங்கத்திற்கு வந்திருக்கிறது. பணத்தை பங்கு பிரிப்பதில் எழுந்த பலத்த போட்டியே இந்த ” நீல மனிதனின் ”  நிஜமுகம் வெளிப்பட மூலக்கரணம் என்கிறார்கள்.

அடைக்கலம் கொடுத்த பெண்மணியை வளைத்தால், அரசியல்வாதிகளை அடுத்தடுத்து அடையாளம் காட்டுகிறார்கள். இந்த சிறுமிகளின் சதை வியாபார சதுரங்க வேட்டையில், கடந்த ஆட்சியாளர்களுக்கும் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்த காவல் துறை உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்பதை அரசியல் பிரமுகர்களின் பேட்டியே அம்பலப்படுத்தி இருக்கிறது.போஸ்கோ சம்பந்தமான ஒரு வழக்கை எந்த காரணத்திற்காக விபச்சார தடுப்பு பிரிவுக்கு மாற்றினார்கள் என்பது தான் மர்மத்தின் உச்சகட்டம்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

தள்ளாத வயதிலும் பொல்லாத ஆசை கொண்ட இந்த பேரிளம் கிழவனை மிரட்டி பறித்த 70 கோடி எங்கே போனது என்பதற்கு விடை கிடைத்தால் போதும் , சில  அதிகாரிகளின் சிறைவாசம் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும்.

தெளிவில்லாத வீடியோவை பதிவை வைத்துக் கொண்டு குற்றவாளி அடையாளம் காண முடியவில்லை. தேடிப் பிடிக்கவும் முடியவில்லை.  பாதிப்புக்குள்ளான சிறுமியையும் அடையாளம் காண முடியவில்லை என்று கோர்ட்டில் கை பிசைந்து நின்று இருக்கிறார்கள் ஸ்காட்லாந்து யார்டு போலீசார். ஆனால், கோர்ட்டில் FAD என்று ( Further Action Drop ) வழக்கை முடித்து வைக்கவில்லை போலீசார்,  மாறாக UN என்று தான் இதை கிடப்பில் போட்டிருக்கிறார்கள்.

நீதியரசி பத்மா
நீதியரசி பத்மா

ஆனால், விலைக்கு வாங்கமுடியாத,  வணங்காமுடியான, நெஞ்சுரம் மிக்க நீதியரசி பத்மா சண்முகசுந்தரம் , போலீசாரின் இறுதி அறிக்கையை ஏற்கவில்லை. ” எத்தனை சென்சிடிவான இந்த வழக்கை, சர்வ சாதாரணமாக முடித்து வைக்க முயற்சிக்கிறீர்கள் ” என்று வீசி எறிந்து, மறுவிசாரணைக்கு உத்தரவிட்டது தான், இந்த வழக்கை மூடி மறைக்க முடியாமல் இன்று நிஜக் குற்றவாளிகள் புழலில் படுத்திருக்க மூல காரணம்.

உச்சநீதிமன்ற   நீதி அரசர்களே “நிதியை ” கண்டு நிலை தடுமாறி தீர்ப்புகளை திருத்தி எழுதி கொண்டிருக்கும் சமகாலத்தில்,  ஒரு சராசரி POCSO கோர்ட்டின் நீதியரசியான பத்மா நெஞ்சை நிமிர்த்தி ,  தன் நெற்றிக்கண்ணை திறந்து பொசுக்கிவிட்டார் போலீசாரை.

மாறாக,   அவரும் விலை போயிருந்தால்  வீரமணியின் இந்த வழக்கு இன்று அகில இந்திய அளவில் இப்படி பரபரப்பாக, கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்காது. இந்த முகமூடி மனிதர்களின் மறுபக்கத்தை மக்களால் அறிந்து கொள்ள முடியாமலேயே போயிருக்கும். எனவே, நெஞ்சை நிமிர்த்திய   அந்த நீதியரசிக்கு ஒரு ராயல் சல்யூட்.

—   இந்திரஜித்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.