அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பூஜையுடன் துவக்கிய ‘அட்டாக்கர்’

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

ஜினிமா மீடியா & என்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் தினேஷ்ராஜ் தயாரிப்பில், நடிகர் தனுஷின் மருமகனான பவிஷ் மற்றும் நடிகர்-இயக்குநர் சுந்தர் சி, நடிகை குஷ்பு தம்பதியினரின் மகளான அவந்திகா சுந்தர் அறிமுகமாகும் ‘அட்டாக்கர்’ படத்தின் பூஜை சென்னையில் ஜூன் 19–ஆம் தேதி நடந்தது. பா.இரஞ்சித்திடம் இணை இயக்குநராக பணியாற்றிய தாமோ நாகபூஷணம் எழுதி இயக்குகிறார்.
Attacker Movie வாலிபால் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும் தமிழ் சினிமாவின் முதல் படம் ‘அட்டாக்கர்’. விளையாட்டின் உற்சாகத்துடன் அதன் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் சமூக அடையாளங்களையும் இணைத்து இப்படம் உருவாகிறது.
இப்படத்தின் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் பா.இரஞ்சித், தயாரிப்பாளர், ஜி. தனஞ்செயன், இந்திய வாலிபால் வீரர்களான ஜி.ஆர். வைஷ்ணவ் மற்றும் எல்.எம். மனோஜ் உள்ளிட்டோர் பங்கேற்று படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
நிகழ்வில் பேசியவர்கள்

இயக்குநர் பா.இரஞ்சித், “எனது கிராமத்தில் வாலிபால் விளையாட்டை அறிமுகப்படுத்திய முதல் நபர் நான்தான். அந்த விளையாட்டு பல இளைஞர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியது. இன்று வாலிபாலை மையமாகக் கொண்டு ஒரு தமிழ்ப்படம் உருவாவது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். ‘அட்டாக்கர்’ மிகப்பெரிய வெற்றியடைய எனது மனமார்ந்த வாழ்த்துகள்” *தனஞ்செயன்*, “தினேஷ்ராஜ் சிறந்த தயாரிப்பாளர். திட்டமிட்ட பட்ஜெட்டில் தரமான படைப்புகளை உருவாக்கும் திறமை அவருக்கு உள்ளது. அதே நேரத்தில், அவர் தயாரிக்கும் படங்கள் தரத்திலும், பிரம்மாண்டத்திலும் தனித்துவம் பெற்றவை. ‘அட்டாக்கர்’ படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது”.
Attacker Movie தயாரிப்பாளர் தினேஷ்ராஜ் , “எங்கள் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகும் ‘அட்டாக்கர்’ எங்களுக்கு மிகவும் சிறப்பான படம். விளையாட்டு சார்ந்த திரைப்படங்களுக்கும், புதிய திறமைகளுக்கும் தொடர்ந்து ஆதரவு அளிப்பதில் பெருமை கொள்கிறோம்.
நடிகர்கள் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக தீவிர வாலிபால் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்தியாவின் முன்னணி வாலிபால் வீரர்களில் ஒருவரான அஜித் லால் உள்ளிட்ட பல தேசிய அளவிலான வாலிபால் வீரர்களும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
விளையாட்டின் துடிப்பையும், மனித உணர்வுகளையும், நமது மண்ணின் கலாச்சார அடையாளங்களையும் இணைக்கும் ஜனரஞ்சகமான படமாக ‘அட்டாக்கர்’ உருவாகி வருகிறது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் படைப்பாக இது அமையும்”.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

டெக்னீஷியன்கள்

ஒளிப்பதிவு: சாய் முனிஷ்
படத்தொகுப்பு: அருள் மோசஸ்
ஆடைவடிவமைப்பு: நௌஷாத்
கலை இயக்கம்:ராமு தங்கராஜ்
பிஆர்ஓ: குணா

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

—   ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.