அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஃபேன்சி நம்பருக்காக அமைச்சர் ஆபீசுக்கு டெய்லி அலைய முடியுமா?

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

”புதுசா கார் வாங்கி முழுசா ஒருமாசமாச்சு. ஃபேன்ஸி நம்பருக்காக பணத்தை கட்டிட்டு, இன்னைக்கு கிடைக்குமா? நாளைக்கு கிடைக்குமானு? காத்திட்டு கெடந்ததுதான் மிச்சம். நம்பரும் கிடைக்கல. கட்டுன காசும் திரும்ப கிடைக்கல. ஒரு மாசத்துல வண்டிய ரெஜிஸ்ட்ரேஷன் செய்யலைனு ஆர்.டி.ஓ.வுக்கு 17,000 தண்டம் கட்டினதுதான் மிச்சம்” னு புது கவர்மெண்ட் பொறுப்பெடுத்ததுக்குப் பிறகு, புதுசா வாகனம் வாங்குனவங்களையெல்லாம் புலம்ப வச்சிருக்கு.
சிலரிடம் பேசினோம். அவ்வளவு விவகாரங்களை கொட்டுகிறார்கள். “முந்தைய ஆட்சியில, கவெர்மெண்டுக்கு 16,000 கட்டனும்னா அதோட சேர்த்து நாற்பதாயிரம் அம்பதாயிரம்னு மொத்தமா வாங்கிடுவாங்க. சொன்ன தேதிக்கு நம்பர வாங்கி கொடுத்திருவாங்க. அதுக்கு எதுக்கு இவ்வளவு ரேட்டுனு கேட்டா, மினிஸ்டர் ஆபிசுக்கு கொடுக்கனும்னு சொல்லுவாங்க. இப்போ புதுசா கவர்மெண்ட் பொறுப்புக்கு வந்த சமயத்துல வண்டி வாங்குனவனெல்லாம் வகையா சிக்கிகிட்டான். இந்த சமயத்துல காச வாங்கின புரோக்கர்களெல்லாம் ஃபேன்சி நம்பர் கேட்டு மினிஸ்டர அணுகினா? ஓனர் எங்கே? நீங்க யாரு? அவர வரச்சொல்லுங்க. நீங்க கிளம்பலாம்னு. கட் அண்ட் ரைட்டா கிளப்பி விடுறாங்களாம். புரோக்கர நம்பி காச கொடுத்தவனெல்லாம், நம்பரும் கிடைக்காம கொடுத்த காசும் கைக்கு திரும்ப வராம தவிக்கிறான்.

விஜய் தமிழன் பார்த்திபன்
விஜய் தமிழன் பார்த்திபன்

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

புதுசா வந்த அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், இனி ஃபேன்சி நம்பர் வேணும்னு கேட்கிறவங்க. நேரடியா என்கிட்டயே வந்திடுங்க. புரோக்கர நம்பி காசு கொடுக்காதீங்கனு சொல்லிட்டாரு. இதுதான் பிரச்சினை. ஒரு வகையில பார்த்தால் இது நல்ல விசயம்தான். ஆனால், இன்னொரு கோணத்துல பார்த்தால் இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்னு புரியும்” என பெருமூச்சு வாங்குகிறார், அந்த இளம் தொழிலதிபர்.
“நான் ஒரு பிசினஸ்மேன். என் சொந்த பயன்பாட்டுக்கு, தொழில் நிமித்தமா வண்டி வாங்குறேன். வருசத்துக்கு மூனு நாலுகூட வாங்குவேன். இது என் தொழில். இதுக்கு முன்ன, இதுக்குன்னு இருக்கிற ஆளுங்ககிட்ட கொடுத்துட்டா, அவன் ஆயிரம் ரெண்டாயிரம் கூட வாங்கினாலும் வேலையை முடிச்சு கொடுத்துடுவான். ஆனால், இப்போ. நான் தான் என் பொழப்ப விட்டுட்டு சென்னைக்கு போயாகனும். நான் போற நாள்ல, போற நேரத்துக்கு அமைச்சர் ஆபீசில் இருப்பாரா தெரியாது? அன்னைக்கு வரல. அடுத்தநாள்தான் வருவார்னா. அங்கேயே தங்கியாகனும். ஒருமுறை நானும் நேர்ல போனேன், அஞ்சு நிமிசத்துல கையெழுத்து போட்டு கொடுத்துட்டாரு. ஆனால், அது ஆர்டரா மாறி என் கைக்கு வரனுமே. அதுக்கு ஒரு வாரம் ஆகும் போயிட்டு வாங்கனு சொல்லிட்டாங்க. நானும் கிளம்பி வந்துட்டேன். திரும்ப அவங்க கூப்பிடுறப்ப நான் நேர்ல போயிதான் ஆகனும்.
சென்னை, செங்கல்பட்டுல இருக்கிறவனுக்கு பிரச்சினை இல்லை. இதுவே, திருச்சியில இருக்கிறவன். அதை தாண்டி திண்டுக்கல், திருநெல்வேலியில இருக்கிறவன் நிலைமை என்ன? ஒரு நம்பர வாங்க குறைஞ்சது ரெண்டு முறை சென்னைக்கு போயாகனும். கவர்மெண்ட்டுக்கு கட்ற காச விட கூட கேட்கலைங்கிறது நல்ல விசயம்தான். ஆனால், இந்த நடைமுறை சிக்கலுக்கு என்ன தீர்வு?” என கேள்வி எழுப்புகிறார், அவர்.
டில்லி, பஞ்சாப் மாநிலங்களில் நடைமுறையில் இருந்துவரும் ஆன்லைன் முறையில் ஏலம் நடத்தியோ அல்லது முற்றிலும் ஆன்லைன் முறையிலோ ஃபேன்சி எண்களை ஒதுக்கும் நடைமுறையை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார்கள். பார்ப்போம், என்ன நடக்கிறதென்று?

தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

 

—    அங்குசம் புலனாய்வுக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.