விதிகளை மீறி இயங்கும் கல்குவாரி ! பதுக்கப்பட்ட ஜெலட்டின் குச்சிகள்! பொதுமக்கள் பகீர் குற்றச்சாட்டு!
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா குள்ளபுரம் பகுதியில் சட்டவிரோதமாக ஜெலட்டின் குச்சிகள், மற்றும் டெட்டனைட்டர் பதுக்கி வைத்து 24 மணி நேரமும் கல்குவாரியில் வெடிவைத்து கற்கள் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குள்ளபுரம் பகுதியில் உள்ள தனியார் வேளாண் தொழில்நுட்ப கல்லூரி அருகே சட்ட விரோதமாக உரிய அனுமதியின்றி ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனைட்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த பதுக்கி வைக்கப்பட்டுள்ள வெடி மருந்துகளைக் கொண்டு 24 மணி நேரமும் வெடி வைக்கப்படுவதால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் வனவிலங்குகளுக்கும் பெரிதும் அச்சம் ஏற்பட்டு வருவதாக பொது மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
இந்த பகுதியில் செயல்பட்டு வரும் கல்குவாரி செயல்படக் கூடாது என நிலத்தின் உரிமையாளர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் திண்டுக்கல் சரக டிஐஜி உள்ளிட்டவர்களிடம் புகார் தெரிவித்தும் காவல்துறையினர் வருவாய் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என நிலத்தின் உரிமையாளர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பெரியகுளம் சார் ஆட்சியர் சட்ட விரோதமாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாக அபராதம் விதிக்கப்பட்டது.
ஆனால் சட்டவிரோதமாக கற்களை வெட்டி எடுக்கும் நபர் அபராத தொகை செலுத்தாமல் மதுரை உயர்நீதிமன்றத்தில் உரிய நோட்டீஸ் கொடுக்காமல் அபராத விதிக்கப்பட்டுள்ளதாக வழக்கு தொடர்ந்து உள்ளார்.
எனவே தேனி மாவட்டத்தில் சட்ட விரோதமாக கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்து கடந்த 10 நாட்களாக கனிமவளத்துறைகளில் எந்தவிதமான பாஸ் வழங்கப்படவில்லை.
ஆனால் குள்ளபுரம் பகுதியில் சட்டவிரோதமாக வெடி மருந்துகளை பதுக்கி வைத்து தினந்தோறும் 24 மணி நேரமும் வெடிவைத்து கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருகிறது.
மேலும் 10 டயர் முதல் 12 டயர் லாரிகளில் கனிவாளங்கள் அதிக பாரத்தில் எடுத்து செல்வதால் கிராம சாலைகள் குண்டும் குழியுமாக மாறி வருகிறது.
உடனடியாக சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் நிலத்தின் உரிமையாளர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
— ஜெய்ஸ்ரீராம்









Comments are closed, but trackbacks and pingbacks are open.