அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திமுகவினர் மீது த.வெ.க. பெண் பிரமுகர் புகார் !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சி ஸ்ரீரங்கம் மங்கம்மா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆசிரியை ரெ மதனா. திமுக மகளிர் தொண்டர் அணி அமைப்பாளராக பதவி வகித்து வந்த அவர் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்.  இந்த நிலையில், ஒரு குறிப்பிட்ட முகநூல் ஐடியில் இருந்து அவரை ஆபாச வார்த்தைகளால் திட்டி முகநூலில் பதிவிட்டனர். அதைத் தொடர்ந்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அதை தொடர்ந்து இன்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் குறைதீர்ப்பு முகாமில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் ‘ என்னுடைய கண்ணியத்தையும் மரியாதையையும் பாதிக்கும் வகையில் ஸ்பா நடத்துகிறார் என்றெல்லாம் பொய்யான தகவல்களை  திமுகவைச் சேர்ந்த சிலர் சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட நபர்களின் செயல்பாடுகளை விசாரித்து ஆபாச மற்றும் அவதூறு கருத்துக்களை பதிவிடுபவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனு அளித்தள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.