அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளப் பகுதியில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் நடைபாதை  பூங்கா !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மலைக்கோட்டை தெப்பக்குளத்தை சுற்றயுள்ள பகுதியில் வண்ண மலர்களால் பூத்துக் குலுங்கும் தபிபியா ரோஸ்ஸியா மரக்கன்றுகளை 10 அடி உயரம் கொண்ட  200 மரங்கள் மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் அவர்கள், மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங் இ.ஆ.ப., ஆகியோர் இன்று (17.08.2026) மரங்களை நட்டு தொடங்கி வைத்தார்கள்.

மலைக்கோட்டை தெப்பக்குளத்தை சுற்றயுள்ள பகுதியில் வண்ண மலர்களால் பூத்துக் குலுங்கும் தபிபியா ரோஸ்ஸியா 200 மரங்கள்  திருச்சி சாரதாஸ் மூலம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

திருச்சி தெப்பக்குளம்
திருச்சி தெப்பக்குளம்

திருச்சிராப்பள்ளி மாநகரின் முக்கிய அடையாளச் சின்னமான திருச்சி மலைக்கோட்டை அடிவாரம் என்.எஸ்.பி ரோடு பகுதியில் அமைந்துள்ள தெப்பக்குளத்தின் நீர் முழுவதும் அகற்றப்பட்டு, தூர்வாரும் பணி நடைபெற்றது. இக்குளம் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமானதாகும்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் ரூ.25.00 கோடி  மதிப்பீட்டில் தெப்பக்குளம் சுற்றுப்பகுதிகளில் நடைபாதை  பூங்கா அமைத்து அழகுப்படுத்துவதற்கான பணியினை மேற்கொள்வதற்கு மதிப்பீடு மாநகராட்சி மூலம் தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தெப்பக்குளத்தை அழகுபடுத்தி பூங்கா அமைத்து பொது மக்களுக்கு இப்பகுதி ஒரு பொழுதுபோக்கு அம்சமாக அமைக்கப்படும்.

இந்நிகழ்வில் நகரப் பொறியாளர்  அண்ணாதுரை, உதவி ஆணையர் சீனிவாசன் நன்கொடையாளர் சாரதாஸ் ரோஷன் மணவாளன் மற்றும் முன்னாள் உதவி ஆணையர்  வைத்தியநாதன் மாமன்ற உறுப்பினர், மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டார்கள் .

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.