தந்தை பெரியார் கல்லூரியில் ஜெனீவா ஒப்பந்த தினம் & மாவட்ட அளவிலான போட்டிகள்!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

ரெட் கிராஸ் சொசைட்டி தமிழ்நாடு கிளை மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட யூத் ரெட் கிராஸ் இணைந்து ஜெனிவா ஒப்பந்த தினம் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகள் தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி மாவட்ட யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளரும் தமிழ்த் துறை இணைப் பேராசிரியருமான முனைவர் இரா.குணசேகரன் வரவேற்புரையாற்றினார்.

நிகழ்வுக்கு பெரியார் கல்லூரி முதல்வர் முனைவர் கஅங்கம்மாள் தலைமை ஏற்று சிறப்புரையாற்றினார். இயற்பியல் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் சிவக்குமார் மற்றும் தமிழ் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் ப.கிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினர்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

திருச்சி மாவட்டத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக், மருத்துவக் கல்லூரி, மருத்துவம் சார்ந்த  கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர் போட்டியில் கலந்து கொண்டனர்.  தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேச்சு போட்டி தமிழ் மற்றும ஆங்கிலத்தில் கட்டுரைப் போட்டி மற்றும் ஓவிய போட்டிகள் நடைபெற்றது.

போட்டிகளுக்கு நடுவர்களாக தமிழ்த் துறையைச் சார்ந்த பேராசிரியர் முனிவர் நா பிரியா, பேராசிரியர் முனைவர் ச.ரேணுகா மற்றும் ஆங்கிலத் துறையை சார்ந்த முனிவர் யசோதா ஆகியோர் நடுவர்களாகப் பணியாற்றினார். நிகழ்வில் ஏராளமான யூத் ரெட் கிராஸ் தன்னார்வலர் மாணவர் மாணவர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பெரியார் கல்லூரி யுத் ரெட் மாணவர்கள் செய்திருந்தனர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.