விராலிமலை கிளை நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம்
விராலிமலை கிளை நூலக வாசகர் வட்ட கூட்டம் நடந்தது. ரூபாய் 20 லட்சம் புதிய கட்டடத்திற்கு நிதி ஒதுக்கி கொடுத்த எம்பி செல்வி ஜோதிமணி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. விராலிமலை கிளை நூலகத்தின் வாசகர் வட்ட கூட்டம் கிளை நூலக வளாகத்தில் வாசகர் வட்ட தலைவர் சிவக்குமார் தலைமையிலும் நிர்வாகிகள் அன்பழகன் பூபாலன் பழனிசாமி முன்னிலையிலும் நடந்தது துணை தலைவர் கண்ணதாசன் வரவேற்றார்.
கூட்டத்தில் வாசகர்கள் வருகையை அதிகப்படுத்துவது நூலக வார விழாவை ஒட்டி உறுப்பினர்கள் புரவலர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது கிளை நூலகத்தை காலை 8 முதல் இரவு 8 மணி வரை செயல்படும் விதமாக முழு நேர கிளை நூலகமாக மாற்றக் கேட்டுக் கொள்வது, புதிய கட்டிடம் கட்டுவதற்கு முன்னர் ரூ40 லட்சமும் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு ரூ 20 லட்சமும் எம்பி நிதியிலிருந்து வழங்கிய எம்பி செல்வி ஜோதிமணி அவர்களுக்கு நன்றி தெரிவித்து பாராட்டுவது கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு ரூபாய் 20 லட்சம் ஒதுக்கப்பட்டு 2 மாதம் ஆகியும் ஒன்றிய பொறியாளர் பிரிவில் திட்ட அறிக்கை சமர்ப்பிக்காமல் உள்ளதை காலதாமதப்படுத்தாமல் விரைவாக அறிக்கை கொடுக்க கேட்டுக் கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன முடிவில் நூலகர் சரவணகுமார் நன்றி கூறினார்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.