வழக்குப் பதிவு செய்யத் தவறிய எஸ்.ஐ பணி இடமாற்றம்! எஸ்பி அதிரடி உத்தரவு!
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கீரம்பூரைச் சேர்ந்தவர் சுகன்யா 36 இவர் கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. இவர் துறையூர் அடுத்த காளிப்பட்டியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் ஒன்றில் பேராசிரியராக பணி செய்து வந்துள்ளார். இவர் தனக்கு தெரிந்த நபர்களிடம் பணம் வட்டிக்கு விடும் தொழிலும் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் துறையூர் கண்ணனூர் அருகே உள்ள சமத்துவபுரத்தில் உள்ள சுமதி என்பவரிடம் பணம் கொடுத்து இருந்ததாகவும் தான் கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு அடிக்கடி தொந்தரவு செய்து வந்ததாகவும் கூறப்படும் நிலையில், கடந்த இருபதாம் தேதி சுகன்யாவை காணவில்லை என அவரது பெற்றோர் துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் அந்த புகாரை போலீசார் ஏற்க மறுத்து ஜம்புநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்யுமாறு சுகன்யாவின் பெற்றோரிடம் போலீசார் கூறியதால் ஜம்புநாதபுரத்திற்கு சென்று அங்கு புகார் அளித்தபோது அங்கும் போலீசார் புகாரை ஏற்கவில்லை என தெரிய வருகிறது.

இதுகுறித்து ஐஜி இடம் சுகன்யாவின் பெற்றோர் புகார் அளித்த நிலையில் காணாமல் போன சுகன்யாவை புகார் குறித்து துறையூர் காவல் நிலையத்திலேயே வழக்குப்பதிய ஐ ஜி அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்ததாகவும் இந்நிலையில் 24ஆம் தேதி துறையூர் திருச்சி சாலையில் கரட்டாம்பட்டி அருகே உள்ள கிரஷர் ஒன்றின் அருகில் உள்ள சிறு பாலத்திற்கு அடியில் அழுகிய நிலையில் பெண் சடலம் ஒன்று கிடைப்பதாக வந்த தகவலை அடுத்து போலீசார் அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சுகன்யாவின் பெற்றோரை அழைத்து பெண்ணின் அங்கு அடையாளங்களை கூறிய நிலையில் இறந்து கிடந்தது தன்னுடைய மகள்தான் என பெற்றோர் உறுதி செய்தனர். இது குறித்து விசாரணை மேற்கொண்டதில் துறையூர் கண்ணனூர் அருகே உள்ள சமத்துவபுரத்தில் சுமதி என்ற நபரிடம் பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை ஏற்பட்டு சுமதி மற்றும் அவரது கணவர் தனது உறவினர்களுடன் சேர்ந்து பணம் கேட்க வந்த சுகன்யாவை கொலை செய்ததாகவும் இறந்த சுகன்யாவை இருசக்கர வாகனத்தில் வைத்து கரட்டாம்பட்டி அருகில் உள்ள பாலத்திற்கு அடியில் கொண்டு சென்று போட்டு விட்டதாகவும் தெரியவரும் நிலையில், இந்த கொலை சம்பந்தமாக ஆறு பேர் வரை கைது செய்து போலீசார் விசாரித்து வந்த நிலையில் இருபதாம் தேதி சுகன்யா காணாமல் போன புகார் குறித்து வழக்கு பதிவு செய்யாமல் இறந்து போன சுகன்யாவின் பெற்றோரை அலை கழித்ததாகவும் மெத்தனம் காட்டியதாகவும் துறையூர் காவல் உதவி ஆய்வாளர் தினேஷை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆயுதப் படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






Comments are closed, but trackbacks and pingbacks are open.