அனுமதியின்றி செயல்பட்ட 12 விடுதிகள் ! மின் இணைப்பை துண்டித்து சீல் வைத்த அதிகாரிகள் !
மேகமலையில் உரிய அனுமதியின்றி செயல்பட்ட விடுதிகள் தங்கும் வீடுகளுக்கு மின் இணைப்பை துண்டித்து 12 இடங்களில் சீல் வைப்பு.
உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில், மேகமலையில் அனுமதியின்றி கட்டப்பட்ட மேலும் 3 குடியிருப்புகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
கடந்த 3 தினங்களாக 12 இடங்களில் அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். உச்சநீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் ஜான் கென்னடி தொடுத்த பொது நல வழக்கை விசாரித்த நீதிபதி, மேகமலை வனப் பகுதியில் அனுமதி பெறாத தங்கும் விடுதிகளை ‘சீல்’ வைக்க தேனி மாவட்ட ஆட்சியருக்கு கடந்த 3 -ஆம் தேதி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, மேகலை ஊராட்சிக்குள்பட்ட அய்யப்பன், தமிழன், பொன் மயில், எஸ்.எம்.ஆர், ஆனந்தா என 9 தனியார் தங்கும் விடுதிகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
அதைத் தொடர்ந்து மேலும் 3 தங்கும் விடுதிகளுக்கு ‘சீல்’ வைத்து மின் இணைப்புகளைத் துண்டித்தனர்.
அதிகாரிகள் பாரபட்சம் எனப் புகார்
உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் மேகமலையில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு வருகிறது. இதில், ஒரு சில தங்கும் விடுதிகளில் 2 முதல் 3 நுழைவு வாயில்களில் ஒன்றை மட்டுமே பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.
இதனால், வரும் நாள்களில் மீண்டும் வழக்கம்போல் செயல்பட வாய்ப்புள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.
— ஜெய்ஸ்ரீராம்.









Comments are closed, but trackbacks and pingbacks are open.