அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

’நாற சக்தி’யின் துர்நாற்றம்! தூக்கியடிக்கப்பட்ட அருண் ஐ.பி.எஸ்.!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

ஜோசப் விஜய்யின் வருகைக்குப் பிறகு தமிழ்நாட்டு அரசியலில் மத அரசியல், சாதி அரசியல், பண அரசியல், கட்டப்பஞ்சாயத்து அரசியல், இதெல்லாம் ஒழிந்துவிட்டதாக, சங்கிகளின் சப்போர்ட்டுடன் உயிர் வாழும் சினிமா டைரக்டர்கள் சிலர், வாய் கூசாமல் பேசி  நாறடித்தார்கள். முதல்வராக ஜோசப் விஜய் அமர்ந்த மறுநிமிடமே அரசுத்துறைகளில் லஞ்சம், ஊழல் முற்றிலும் ஒழிந்துவிட்டதாக வெட்கமே இல்லாமல் முட்டுக் கொடுத்தார்கள் சீட்டிங் பேர்வழியான சீனு ராமசாமி போன்ற சினிமா டைரக்டர்கள்.

“போன மாசம் கூட பத்திர ஆபீசுக்குப் போனேன். பத்து பைசா கேட்காமல் வேலையை முடித்துக் கொடுத்தார்கள்” –இதுவும் ஒரு அரைமெண்டல் சினிமா டைரக்டர் ஒருவனின்  உளறல்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

vijay
vijay

“இப்ப இருபது நாளைக்கு முன்னால தாசில்தார் ஆபீஸ் போனாரு என் நண்பர். நீங்க ஏன் இங்க வர்றீங்க, நாங்களே உங்க இடத்துக்கு வந்து வேலைய முடிச்சிக் கொடுத்திருப்போமே. ஏன்னா ஜோசப்பு எங்களை அப்படித்தான் டிரெய்ன் பண்ணிருக்காருன்னு தாசில்தார் சொன்னதா என் நண்பர் சொன்னார்”—இது கேடுகெட்ட சாமியார் ஒருத்தனின் பினாமியாக இருக்கும் சினிமா தயாரிப்பாளர் ஒருவனின் கேணத்தனமான பேச்சு.

யாவரும் கேளீர்

இப்படி தினமும் தினுசுதினுசாக உருட்டி ஜோசப் விஜய்யை ‘புனிதர்’ஆக்க படாதபாடுபடுகிறது சினிமா கூலிப்படை.

இந்த நிலையில் தான் கடந்த 10-ஆம் தேதி கரூரில் “அரசாங்க ஆபீசில் யாராவது லஞ்சம் கேட்டா என் பேரைச் சொல்லுங்க. எல்லோரும் ஒண்ணுக்குப் போயிருவாங்க” என வீரவசனம் பேசி, தன்னைத் தானே ‘புனிதர்’ ஆக்கிக் கொண்ட ஜோசப் விஜய்.

”அடடா….ஆஹா…. இந்த வார்த்தைக்குத் தான் தமிழ்நாடே காத்திருந்துச்சு” என  இதற்கும் உடனே ட்விட்டரில் கூவினார் சீட்டிங் சீனு ராமசாமி.

இப்ப அருண் ஐ.பி.எஸ்.தூக்கியடிக்கப்பட்ட கதைக்கு வருவோம்…

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த அருண் ஐபிஎஸ்., தேர்தல் கமிஷனால் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். ஜோசப் விஜய் முதல்வரான பிறகு லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குனராக கடந்த மே.25-ஆம் தேதி நியமிக்கப்பட்டார். இந்தப் பதவிக்கு வந்ததுமே அரசு அலுவலங்களில், குறிப்பாக பத்திரப்பதிவுத்துறை, போக்குவரத்துத்துறை, வருவாய்த்துறை அலுவலகங்களில் தீவிர ரெய்டு நடத்த உத்தரவிட்டார் அருண். பலர் கையும் களவுமாக சிக்கினார்கள். சென்னை கொடுங்கையூர் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர், 8 கோடி ரூபாய் சீட்டிங் கேஸில் கைது செய்யப்பட்டார்.

Tamil Nadu transfers DVAC chief Arun, appoints C Mageshwari with additional  chargeபழனியில் முருகன் கோவிலுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் நிலம், தனிநபர் ஒருவனுக்கு தாரை வார்க்கப்பட்டதில் அமைச்சர் ஒருவரின் பெயரும் சம்பந்தப்பட்டு நாறியது. நீதிமன்றங்களில் அரசு வக்கீல்களை நியமிக்க 3 முதல் 5 லட்சம் வரை கைமாறியதாக தவெக வக்கீல் ஒருவரின் ஆடியோ ரிலீசாகி, வசமாக சிக்கினார் அமைச்சர் ஒருவர். நகராட்சி நிர்வாகத்துறையில் அரை மணி நேரத்தில் டெண்டரை சமர்ப்பிக்கும் உத்தரவு வந்து அனைவரையும் அலற வைத்தது.

டாஸ்மாக் சரக்குகளின் விலையைக் கூட்டுவதற்கு மதுபான ஆலைகளின் அதிபர்களிடம் 300 கோடி பேரம் நடந்துள்ளதாக முன்னாள் அமைச்சர், அதிமுகவின் முக்கியத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பகீர் கிளப்பினார்.

இப்படி நாற சக்தியின் துர்நாற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தான் கடந்த 10-ஆம் தேதி, அதாவது லஞ்சம் கேட்டா என்பேரைச் சொல்லுங்கன்னு ‘புனிதர்’ சொன்ன அதே நாளில் முக்கியமான நாளிதழ்களில் நான்கு கால செய்தி ஒன்று வெளியானது.

அதாவது ‘ஜூலை.-03-ஆம் தேதியிலிருந்து 09-ஆம் தேதி வரையிலான ஒரு வாரத்தில்  விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள சப்-ரிஜிஸ்ட்ரார் ஆபீஸ், தாசில்தார் ஆபீஸ், ஆர்டிஓ[போக்குவரத்து] ஆபீஸ்களில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் 24 லட்ச ரூபாய் கைப்பற்றப்பட்டது. லஞ்சம் வாங்கியவர்கள் விசாரணை வளையத்தில் இருக்கிறார்கள்’—இதான் அந்த செய்தி.

”அடேங்கப்பா…… புனிதரின் ஆட்சியில், அதுவும் ஒரே வாரத்தில் 24 லட்சம் லஞ்சப் பணமா? மாற்றம் நல்லாவே நாறுது” என மக்கள் காரித்துப்பினார்கள். சினிமா கூலிப்படைகளைத் தேடினார்கள்.

“என்னடா இது மாற்றத்துக்கு வந்த சோதனை? அருண் ஐபிஎஸை கண்டினியூ பண்ணவிட்டா… மக்கள் நம்மளை கண்டமேனிக்கு காரித்துப்ப ஆரம்பிச்சிருவாங்களே, நம்ம ‘புனிதர்’ பட்டம் புழுத்துப்போகுமேன்னு கவலைப்பட்ட முதல்வர், உடனடியாக அருண் ஐபிஎஸை போலீஸ் டிரெய்னிங் காலேஜின் டைரக்டராக தூக்கியடித்துவிட்டார். லஞ்ச் ஒழிப்புத்துறையில் சிறப்பு புலானாய்வுப் பிரிவில் ஐஜியாக இருக்கும் மகேஸ்வரிக்கு கூடுதல் பொறுப்பாக, அதே துறையின் இயக்குனராக நியமித்துள்ளார் ‘புனிதர்’.

புனிதரின் புனித சேவை இன்னும் தொடரும்….

—   கரிகாலன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.