பனை சார்ந்த வாழ்வியல் ! அசத்திய அரசுப்பள்ளி மாணவர்கள் !
புகைப்படம் என்பது வெறும் நினைவுகளைப் பதிவு செய்யும் கருவி மட்டுமல்ல; ஒரு சமூகத்தின் வாழ்வியல், பண்பாடு மற்றும் போராட்டங்களை ஆவணமாகவும் அமைக்க முடியும் என்பதை நிரூபிக்கும் விதமாக, பனையேறி மக்களின் வாழ்வியல், உழைப்பு மற்றும் அன்றாட வாழ்க்கைப் போராட்டங்களை விளக்கும் வகையில் ‘பனை வேர்களின் கதைகள்’ என்ற பொருண்மையில் 200-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் கொண்டு ,’பாரி நெட்வொர்க்’ (PARI Network) அமைப்பின் உதவியோடு, விழிப்புணர்வு கண்காட்சி, சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் அமைந்துள்ள லலித் கலா அகாடமியில் நடைபெற்றது.
தங்களது வாழ்வியலை படம்பிடித்த சக்தி முனீஸ்வரி, முனீஸ் பிரபா, ஜனனி, பொண்ணு லக்ஷ்மி, ஆத்தி செல்வம், ஜெபமாலை தங்கம், மோனிகா அத்தனைபேரும் 11-ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு அரசுப்பள்ளி மாணவர்கள் என்பதுதான் இதில் ஹைலைட்.
— மு.வசீர் அகமத்
Comments are closed, but trackbacks and pingbacks are open.