வாழ்வுக்கு வழி சொல்லாமல், வீட்டை காலி செய்ய சொல்வதா?
மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக சின்ன உடைப்பு கிராமத்தில் நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.
மதுரை விமான நிலையத்தில் தற்போதைய 7,500 அடி நீளமுள்ள விமான ஓடுதளத்தை 12,500 அடியாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக, சின்ன உடைப்பு கிராமத்தில் உள்ள 144 பேரின் வீடுகள், நிலங்களை கையகப்படுத்த திட்ட வரையரை தயாரிக்கப்பட்டு, இதற்கான ஆணை, கடந்த 2009ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு, 2022ஆம் ஆண்டு அதற்கான மதிப்பீடு தொகையும் நிர்ணயம் செய்யப்பட்டது.
நிவாரணத்தொகையை வழங்கியதோடு, மறுகுடியமர்வு மற்றும் மறுவாழ்வு குறித்த எந்தவிதமான திட்டமும் இல்லாமல், இடத்தை கையகப்படுத்த நிர்வாகம் முனைந்ததையடுத்து நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றமும் இடத்தை காலி செய்ய உத்தரவிட்டதையடுத்து, அதிகாரிகள் தரப்பில், இடத்தை கையகப்படுத்த முனைப்பு காட்டி வருகிறார்கள். மறுகுடியமர்வு மற்றும் மறுவாழ்வுக்கு வழியை சொல்லுங்கள் என்று பாதிக்கப்பட்ட சின்ன உடைப்பு கிராம மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.
— ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.