“நீட்“ எதிர்ப்பு மாணவா்கள் போராட்டம் முடிவுக்கு வந்ததா?

அரசியல் கொத்து புரோட்டா

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

‘நீட்’ (NEET) உள்ளிட்ட மத்தியத் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஒன்றியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜித் டிப்கே ஒருங்கிணைப்பில் 2026 ஜூன் 6ஆம் நாள் முதல் டெல்லி ஜந்தர் மந்தரில்  போராட்டம் தொடங்கியது.  ஜூலை 20 அன்று பாராளுமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஜூலை 25, 2026 அன்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். நீட் முறைகேடுகள் களையப்பட வேண்டும் என்ற போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. நீட் என்பதே மோசடியானது, முறைகேடானது என்ற தமிழ்நாட்டின் கோரிக்கை வெற்றி பெறவில்லை.

டெல்லி காவல்துறையைக் கையில் வைத்துள்ள ஒன்றிய அரசு, கடுமையான அடக்குமுறைகளைக் கையாண்டது. எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் தடியடி மற்றும் கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசப்பபட்டன. போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது. காவல்துறையைச் சார்ந்த ஒருவர் ஒரு பெண்ணின் சட்டையை கிழித்து மானபங்கம் செய்துள்ளார். காஷ்மீரில் பயன்படுத்தப்படும் பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதால் மாணவர் ஒருவர் கண் பார்வையை இழந்துள்ளார். போராடுவது குற்றம் என்று ஒன்றிய அரசு எடுத்த எல்லா நடவடிக்கைகள் மீதும் உச்சநீதிமன்றம் கடும் கண்டத்தைப் பதிவு செய்து ஒன்றிய அரசின் தலையில் நங்கு…. நங்கு…என்று குட்டியுள்ளது.

இந்த வார அங்குசம் வார இதழில்…

காங்கிரஸ் ஆளும் கர்நாடகம், தெலங்கனா, கேரள மாநிலங்களில் மாணவர் போராட்டங்கள் பெரிய அளவில் நடைபெறவில்லை என்பது கவனத்தில் கொள்ளவேண்டிய செய்தியாகும். டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் மோடியின் வீட்டை முற்றுகையிடப் போகும்போது, கைது செய்யப்பட்டார். காங்கிரஸ் மீது கைவைத்தால்…. என்று வீரமுழக்கமிட்ட தமிழ்நாடு தலைவர் மாணிக்தாகூர் அறிக்கை கொடுத்துவிட்டு. பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தாமல் தவெக பாணியில் அமைதியாக இருந்தார்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

பாஜகவைக் கொள்கை எதிரி என்று அறிவித்துவிட்டு ஆட்சியில் அமர்ந்துள்ள தவெக அரசு டெல்லியில் நடந்த மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தரவில்லை. நீட் முறைகேடுகள் குறித்து எந்தவொரு கண்டன அறிக்கையும் தவெக வெளியிடவில்லை. இராகுல் கைதைக் கண்டித்து முதல் அமைச்சர் ஜோசப் விஜய் அறிக்கையொன்றை வெளியிட்டு வழக்கம்போல் அமைதியாக இருந்தார். மாணவர் போராட்டம் நடந்துவிடக் கூடாது என்ற பதற்றத்தில் தவெக அரசு மெரினா கடற்கரையை இழுத்துப் பூட்டி, ஆயிரக்கணக்கில் காவல்துறையை நிற்க வைத்தது. மாநிலம் முழுவதும் மாணவர் இயக்கங்கள் கண்காணிக்கப்பட்டன. வகுப்பறைக்குள் காவல்துறை புகுந்து 180 மாணவர்கள் போராடத் திட்டமிடுகிறார்கள் என்று கைது செய்தது. மாணவர் கைது தொடர்பாக, சிபிஎம் செயலாளர் சண்முகம் செய்தியாளர்களிடம் பேசும்போது, “அரசுக்கு அளித்துவரும் ஆதரவைத் திரும்பப் பெறவேண்டியிருக்கும்” என்று எச்சரிக்கை கொடுக்கும் அளவிற்கு மாணவர் போராட்டங்களை நடக்காமல் தவெக அரசு பார்த்துக் கொண்டு, அமித்ஷாவிடம் விஜய் நல்லபெயர் வாங்கியிருப்பார்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

போராட்டங்கள் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் இராஜ்மோகன்,“போராட்டம் என்பது பொதுவெளியில் நடத்தப்படக்கூடாது. முன்னனுமதி பெறவேண்டும். அனுமதி பெற்று போராட்டத்தை மாணவர்கள் நடத்தவேண்டும்” என்று கூறியபோது மாணவர்கள், “மெரினா…. மெரினா…” என்று தொடர்ந்து கூச்சல் எழுப்பவே, அமைச்சர் “ஆளைவிட்டால் போதும் சாமி” என்று ஓட்டம் பிடித்தார். சிபிஐ மாநில அலுவலகமான பாலன் இல்லத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது. சென்னையின் ஜந்தர் மந்தராக பாலன் இல்லம் திகழ்ந்தது.

போராடிய மாணவர்களின் வீடியோ பதிவுகள் மூலம் அவர்களின் ஆதார் எண் காவல்துறையால் சரிபார்க்கப்படுகின்றதாம். சில ஆண்டுகளுக்கு முன்பு DYFI நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டு கைதான பெண் ஒருவர் TNPSC தேர்வு மூலம் காவல்துறை பணியில் சப்-இன்ஸ்பெக்டர் பணியில் இணைகிறார். விண்ணப்பத்தில் வழக்கு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். சில மாதங்களில் காவல்துறை அவருடைய புகைப்படத்தை ஆய்வு செய்து, DYFI போராட்டத்தில் கலந்துகொண்டு பெயரை மாற்றிக் கூறியுள்ளார் என்பதைக் கண்டுபிடித்து, அந்தப் பெண் பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க அரசுகள் பல வழிகளைக் கண்டுபிடித்து வருகின்றன. இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதை நம்புவோம். ஜனநாயகத்தின் ஒரு பகுதியே போராடும் உரிமை என்பதையும் நம்புவோம்.

—  மாஸ்டர் ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.