“விவசாயிகள் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும்!” – தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!
மதுரையில் தமாக தலைவர் ஜி.கே.வாசன் பேட்டியளித்த போது,
மேகதாது அணை பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். விவசாயிகள் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும். 2மாதமாக தண்ணீர் வரவில்லை விவசாயிகளின் அவலநிலையை நினைத்து பார்க்க வேண்டும். புதிய அரசு பதவி ஏற்றதும் விவசாயிகளுக்கு நம்பிக்கையை கொடுத்தது முதல்வர் விவசாயிகளுக்கு செய்ய வேண்டிய கடமையாக நேரடியாக கர்நாடகாவுக்கு சென்று பேசுவது நல்ல முயற்சி. 12வருடங்களுக்கு பின்னர் ஒரு முதல்வர் கர்நாடகாவுக்கு சென்று தண்ணீர் பெறுவதற்கான உரிமையை நிலைநாட்ட முயல்வது வரவேற்கத்தக்கது தமாக கட்சியின் மண்டல கூட்டங்கள் முடிந்த பின்னர் செப்டம்பர் முதல் வாரத்தில் கூட்டணி நிலைப்பாடு குறித்து முடிவு செய்வோம்.
சட்டம் ஒழுங்கு கொலை,கொள்ளை குற்றங்களை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். லாக்அப் மரணங்கள் விசாரணைகள் சரியாக நடைபெற வேண்டும். மாணவர் பிரச்சினைகளை மத்திய அரசு பொறுப்போடு அணுகவில்லை மாணவர் மீது தடியடி நடத்துவது தவறு. காவல் துறையினர் மாணவர்களை பொறுப்பாக நடத்த வேண்டும்.
தமிழகத்தில் நீட் எதிர்ப்பு போராட்டம் நடத்துபவர்களை கைது செய்வது, அமைச்சர்கள் படம் பார்த்து அழுதது குறித்த கேள்விக்கு ….
மாணவர்கள் நீட் வேண்டாம் என போராட்டம் நடத்துகிறார்கள். அதே நிலைப்பாட்டில் தான் தமிழக அரசு இருக்கிறது. போராட்டங்களில் சட்டம் ஒழுங்கு நடைபெறக்கூடாது என்ற கவனமும் அரசுக்கு இருக்கிறது. அமைச்சர்கள் படம் பார்த்து அழுதது தவறு என்ற வாதத்தை நான் ஏற்கவில்லை. அமைச்சர்கள், அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவரவர் சுகதுக்கங்களை தடைபோட்டு நிறுத்த முடியாது.
தனிமனித சுதந்திரத்திற்கு தடையாக இருக்க கூடாது. ஜனநாயகன் படம் ஏன் தடை செய்யப்பட்டது. அதன் பின்னாலுள்ள சிக்கல்களின் அடிப்படையில் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். மாணவர் ஆர்பாட்டங்களுக்கு ஒத்துழைப்பு, ஆதரவு அளிப்பதாக தவெக தெரிவித்துள்ளது. எல்லோருக்கும் நீட் போராட்டங்களின் முக்கியத்துவம் தெரியும் அதனடிப்படையில்த வெக கட்சியின் செயல்பாடு இருக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சி இருக்கும் தவெக கூட்டணியில் அங்கம் வகிப்பீர்களா என்ற கேள்விக்கு …
காங்கிரஸ் கட்சியுடன் எங்களுக்கு கோபதாபம் கிடையாது. எங்கள் குறிக்கோள் காமராஜர் ஆட்சிதான் 60ஆண்டுகளுக்கு பின்னர் இப்போதுதான் காங்கிரசு கட்சிக்கு இரண்டு அமைச்சர்கள் கிடைத்திருக்கிறார்கள். என்பது மகிழ்ச்சியான விஷயம் காங்கிரசுடன் மோதல் போக்கு கிடையாது என்றார்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.