அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

“நீட் தேர்வு வேண்டாம் என்பதே முதலமைச்சரின் நிலைப்பாடு!” – அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தேனி மாவட்டம் வீரபாண்டி பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சமுதாய கூடத்தில் பல்வேறு அரசு துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

உணவு பொருள் வளங்கள் துறை, வருவாய் துறை, மருத்துவ துறை, வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறை சார்பில் 7873 பயனாளிகளுக்கு 57 கோடியே 76 லட்சம் மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார்,

தேனி மாவட்டம் கடந்த 70 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட மாவட்டமாகத்தான் இருந்துள்ளது, காமராஜர் முதல்வராக இருந்த காலத்தில் பெரிய அளவில் எந்த ஒரு திட்டமும் கொண்டு வரப்படவில்லை.

யாவரும் கேளீர்

முல்லைப் பெரியாறு ஆற்றில் இருந்தும் மோட்டார் பம்புகள் மூலமும் தண்ணீர் பிடிக்கப்பட்டு வணிக ரீதியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றிற்கெல்லாம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

நீட் வேண்டாம் என்பதே நம் தெளிவான நிலைப்பாடு, நீட்டுக்கு எதிராக டெல்லியில் நடக்கும் போராட்டத்தில் காவல்துறையின் நடவடிக்கைக்கு அப்போதே கண்டனம் தெரிவித்துள்ளோம்.

நீட் தேர்வை சீரமைக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையும் டில்லி போராட்டத்தின் மூலம் எழுந்துள்ளது. ஆரம்பம் முதலே நமது நிலைப்பாடும் தமிழ முதல்வர் நிலைப்பாடும் நீட வேண்டாம் என்பது தான்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

தமிழகத்திலும் நீட் தேர்வை எதிர்த்து நிறைய மாணவர்கள் போராடி வருகிறார்கள் அவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பும் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. நீட் விவகாரத்தில் நமது நிலைப்பாட்டில் எந்த மாறுதலும் இல்லை.

மின் கட்டணம் விஷயத்தில் எந்த குழப்பமும் இல்லை. 200 யூனிட்டுக்கு கட்டணமில்லை என்ற திட்டம் அப்படியே தான் உள்ளது.

சென்னை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மின் கட்டணம் அதிகமாக உள்ளது என்று சொன்னர்கள், ஆய்வு செய்தபோது அது போன்று இல்லை. ஆய்வு செய்த காட்சிகளை எங்களுக்கு வீடியோ ஆதாரத்தோடு கொடுத்திருக்கிறார்கள்.

ஒரு சில இடங்களில் சிஸ்டத்தின்  தவறுகளை சரி செய்ய சொல்லியுள்ளோம். எந்த விதத்திலும் மின் கட்டணம் உயரவில்லை.

நிறைய இடங்களில் சமூக வலைத்தளங்களில் மின் கட்டணம் உயர்வு என தவறான தகவல் வந்துள்ளது, எங்கேயாவது மின் கட்டணம் உயர்வு என தெரிய வந்தால் அதையும் சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தின் தலையாய பிரச்சனையான மலை வருசநாடு மற்றும் அதனை சுற்றியுள்ள  மலை கிராம மக்களை புலிகள் காப்பக ஆக்ரமிப்பாளர்கள் எனக் கூறி அவர்களை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நீர்மல் குமார்,

பல ஆண்டுகளாக இங்கே குடியிருக்கும் மக்களை வெளியேற்றும் எண்ணம் இல்லை. அவர்களுக்கு தேவையான வாழ்வாதாரத்தை உருவாக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உச்சநீதி மன்ற உத்தரவு இருந்தாலும் மக்களுக்கு தேவையான உதவிகளை கண்டிப்பாக அரசு செய்யும் என தெரிவித்தார்.

—  ஜெய்ஸ்ரீராம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.