அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

இந்தப் பொண்ண எங்கியோ பாத்தாப்ல இருக்கே ?

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

மாப்பிள்ளை பொண்ணு ரெண்டு பேரும் தோழர்கள். கம்யூனிஸ்டுகள். ISCUF இஸ்கப் செயல்பாட்டாளர்கள். ‘இந்தப் பொண்ண எங்கியோ பாத்தாப்ல இருக்கே’ தோன்றுகிறதில்லையா? சென்னை பாலன் இல்லத்து நீட் எதிர்ப்புப் போராட்டத்தில்… “வெறுப்பில் இருந்து ஆஸாதி அநீதியிலிருந்து ஆஸாதி வேலையின்மையிலிருந்து ஆஸாதி உரக்கச் சொல்வோம் ஆஸாதி” முறுக்கிய கரங்களோடு உயர்த்திய குரலால்மொத்தத் தமிழகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்த போராளி.

நேற்று மத்தியானம் வரைக்கும் போராட்டத்தில் முழங்கிவிட்டு – கூட இருந்த காதலன் வாஞ்சிநாதனின் கையைப் பற்றிக் கொண்டு சாயந்தரம் நாலு மணிக்கெல்லாம் பேசின் பிரிட்ஜ் முதல்வர் கலியாண மண்டபத்துக்கு வந்து விட்டாள். இந்தப் போராளிப் பெண் திவ்யதர்ஷினி.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

ஆறு மணிக்கு திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சுப்பராயன் மாலை எடுத்துக் கொடுக்க எளிமையும் எழுச்சியுமாக நடந்தேறிவிட்டது வாஞ்சிநாதன் திவ்யா கலியாணம். தமிழ்நாடு கல்வி அமைச்சர் ராஜ்மோகன் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மூ வீரபாண்டியன் – இஸ்கப் மாநிலச் செயலாளர் ராதாகிருஷ்ணன் இஸ்கப் சென்னை மாவட்டத் தலைவர் வித்யா – இன்னும் ரெண்டு மூணு பேர் வாழ்த்துரைத்தார்கள்.

வாஞ்சிநாதன் திவ்யா கலியாணம்
வாஞ்சிநாதன் திவ்யா கலியாணம்

யாவரும் கேளீர்

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

எழுத்தாளரும் சமூக செயல்பாட்டாளருமான மணமகன் வாஞ்சிநாதன் அது அரசியல் மேடை அல்ல கலியாண மேடை என்றுகூடப் பாராமல் என்ன பண்ணினார் தெரியுமா?

வாழ்த்த வந்த அமைச்சர் ராஜ்மோகனிடம் – “இந்தத் திருமணம் நடக்கும் முதல்வர் திருமண மண்டபம் மாதிரி நகரத்தில் இருக்கும் அனைத்து மண்டபங்களின் பராமரிப்பு வேலைகளில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். பழைய அழுக்கான டஞ்சன் சமூக நலக் கூடங்கள் மாதிரி மாறிவிடாமல்  பார்த்துக் கொள்ள வேண்டும். ரொம்ப முக்கியம் – இந்த வேலையைத்தனியார் கைகளில் கொடுத்து விடாதீர்கள் மந்திரியாரே!” என்று அதிரடித்தார். ஆனால், அமைச்சர் ராஜ்மோகன் அதிரவில்லை. “மாப்பிள்ளையின் கோரிக்கை இப்போதே ஏற்கப்பட்டது!” என்று அப்போதே அறிவித்தார்.

அடுத்து  மணமகள் டர்ன். “கலியாணத்துக்கு வந்த எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள்” என்ற  திவ்யா – “ஆச்சாரம் சடங்குகள் இல்லாமல் எல்லாரும் எங்களை மாதிரியே சீர்திருத்தத் திருமணம் செய்து கொள்ளுங்கள்!” என்றதும் -என் போலும் இளைஞர்களின் அப்ளாஸ் கூரையைக் கிழித்தது. புருஷனுக்கேத்த பொண்டாட்டி.

– ரத்ன சந்திரசேகர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.