எலிபேஸ்டுகள் தின்ற எஸ்.ஐ. சிகிச்சைப்பலனின்றி சாவு!
எலிபேஸ்டுகள் தின்ற எஸ்.ஐ.சி சிகிச்சைப்பலனின்றி சாவு!
மன உளைச்சல் காரணமாக இரண்டு எலி பேஸ்டுகளை தின்று தற்கொலைக்கு முயன்று தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த காவல்துறை உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ) தினேஷ்குமார் சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு பரிதாபமாக இறந்தார்.
அய்யம்பேட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் தினேஷ்குமார். வயது 40. 2011-ம் ஆண்டு பேட்ச்-ஐச் சேர்ந்த நேரடி எஸ்.ஐ-யான தினேஷ்குமார் கடந்த நான்கு மாதங்களாக அயல் பணியில் பாபநாசம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார்.
உடல்நலக்குறைவு காரணமாக இவர் ஒரு மாத காலம் மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) தான் மீண்டும் பணிக்கு திரும்பினார். இந்நிலையில் அன்றைய தினம் பிற்பகல் 2 மணியளவில் இரண்டு எலிபேஸ்டுகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
வழக்கம்போல் ரோந்துக்கு சென்றபோது பாபநாசம் பேருந்து நிலையம் அருகே இரண்டு எலிபேஸ்டுகளை தின்றுள்ளார்.
ஆனால் இதுபற்றி அவர் வேறு யாரிடமும் தெரிவிக்கவில்லை. வெள்ளிக்கிழமை மாலை உத்தாணி என்ற இடத்தில் சாலையில் அவர் வாந்தி எடுத்ததைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் அவரை காரில் அழைத்துவந்து மெலட்டூரில் உள்ள அவரது வீட்டில் விட்டுள்ளார்.
இந்நிலையில், அவரது உடல்நிலை மோசமாகவே சனிக்கிழமை காலை காலை 5.30 மணியளவில் அவர் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அவர் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.40 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
தினேஷ்குமார் ஒரிஜினலாக திருநெல்வேலி காவல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அங்கு பணிபுரிந்தபோது வழக்குகளை கையாண்டதில் இவருக்கு நிறைய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, தினேஷ்குமார் திருச்சி மத்திய மண்டலத்தைச் சேர்ந்த தஞ்சை சரகத்துக்கு மாற்றப்பட்டார் எனக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் பணிபுரிந்தபோது ஏற்பட்ட ஒரு பிரச்சினை தொடர்பாக இவர் மீது தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக நவம்பர் 20-ம் தேதி (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என மாநில மனித உரிமைகள் ஆணையம் தினேஷ்குமாருக்கு சம்மன் அனுப்பியிருந்தது.
அதனால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். ஆனால் அந்த விசாரணைக்கு ஆஜராகமால் பாபநாசம் காவல்நிலையத்தில் மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார்.