தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேளாண் மாணவர்களின் அனுபவக்கற்றல் தயாரிப்புகள் கண்காட்சி
திருச்சி சமயபுரத்தில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் வேளாண் அறிவியல் பள்ளி சார்பில் இறுதியாண்டு மாணவர்களின் அனுபவக்கற்றல் தயாரிப்புகள் கண்காட்சி பள்ளியின் புல முதல்வர் டாக்டர் கே. சோழன் தலைமையில் 19.08.2026 மற்றும் 20.08.2026 ஆகிய இரு நாட்களில் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
இக்கண்காட்சியில் வேளாண் அறிவியல் பள்ளியைச் சேர்ந்த இறுதியாண்டு இளங்கலை வேளாண் மாணவர்கள் தங்களது கல்வி அறிவு, நடைமுறை அனுபவம் மற்றும் புதுமையான சிந்தனையை ஒருங்கிணைத்து உருவாக்கிய பல்வேறு வேளாண் சார்ந்த தயாரிப்புகள், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் புதுமையான செயல்திட்டங்களை காட்சிப்படுத்தினர்.

மாணவர்கள் தங்களது தயாரிப்புகளின் தயாரிப்பு முறைகள், செயல்பாடுகள், பயன்பாடுகள் மற்றும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கான பயன்கள் குறித்து பார்வையாளர்களுக்கு விளக்கினர். மாணவர்களின் படைப்பாற்றல், புதுமையான சிந்தனை, தொழில் நுட்பத்திறன், தொழில் முனைவுத்திறன் மற்றும் நடைமுறை அறிவு ஆகியவை கண்காட்சியில் வெளிப்பட்டன.
கண்காட்சியை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மருத்துவர் சி.கே. ரஞ்சன், பதிவாளர் முனைவர் எஸ். செல்வகுமார் மற்றும் டீன் – அகாடமிக்ஸ் முனைவர் வி. எவ்லின் பிரிந்தாஆகியோர் பார்வையிட்டு, மாணவர்களின்புதுமையான முயற்சிகளைப் பாராட்டினர். பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கண்காட்சியில் பங்கேற்று, மாணவர்களை ஊக்குவித்தனர்.
மாணவர்களின் கல்வி அறிவை நடைமுறை அனுபவத்துடன் இணைத்து, வேளாண்துறையின் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ற புதுமையான தயாரிப்புகளை உருவாக்கும் திறன் மற்றும் தொழில்முனைவுத்திறனை மேம்படுத்தும் நோக்கில் இத்தகைய அனுபவக்கற்றல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.






Comments are closed, but trackbacks and pingbacks are open.