நாகர்கோவில் மாநகராட்சியில் பொறுப்பு மேயரும் ஆணையரும் தினம் தினம் ஆயிவுகளை நடத்தி வருகிறார்கள். ஆனால் மாநகராட்சி பணிகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை மேயராக மகேஷ் இருந்தபோது எப்படி தரமில்லாத பணிகள் நடைபெற்றதோ அதை போன்று தான் தற்போதும் தரமில்லாத பணிகள் தொடர்கதையாகி நடந்து வருகிறது.
கடந்த 30-08-2022 அன்று 22 வது வார்டு வாட்டர் டேங் ரோடு மற்றும் ஏசடியான் தெருவில் அரசு தலைமை செயலாளரின் உத்தரவை மதிக்காமல் பழைய சாலையை அகற்றாமப் புதிய சாலையை உயரம் கூட்டி போட்டதால் மழைநீர் ஓடை மீது போட்டிருந்த இரும்பு அழி அரை அடிக்கு பள்ளம் ஏற்பட்டு இருசக்கர வாகனங்கள் அதில் விழுந்து நிலை தடுமாறி வந்தது. பல புகார்களுக்கு பிறகு பத்திரிக்கையில் செய்தியானதும் முன்னாள் மேயர் மகேசும் அன்றைய துணை மேயரும் இன்றைய பொறுப்பு மேயர் மேரி பிறின்சி லதா அவர்களும் பத்திரிக்கையோடு சம்வ இடத்திற்கு சென்று ஆலோசனை நடத்தி சாலை மட்டத்திற்கு இரும்பு அழி உயர்த்தப்பட்டது.
நான்கு ஆண்டுகளுக்கு பிறகு 30-08-2026 எடுத்த புகைப்படம் மீண்டும் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அன்றைய துணை மேயர் இன்றைய பொறுப்பு மேயர் மீண்டும் அதே உயரம் கூட்டிய சாலை, மீண்டும் அதே மழை நீர் ஓடையின் இரும்பு அழி பள்ளமானது, மீண்டும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி வருகின்றனர்.
பெண்கள் நிர்வாக பொறுப்பில் வரும்போது ஒரு தாய் ஸ்தானத்தில் லஞ்சம் ஊழல் இல்லாமல் மக்கள் மீது அக்கறையோடு, மக்களுக்கு ஆபத்தில்லாமல், மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படாமல் நல்ல நிர்வாக திறனோடு தரமான பணிகளை செய்து மக்களிடம் நற்பெயரை சம்பாதித்து உதாரணமாக விளங்குவார்கள் என்ற நம் எண்ணத்தை பொய்யாக்கி வருகிறார்கள் மேயரும் ஆணையரும்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.