‘மொத ராத்திரி’ மொரட்டு ஹிட்!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த’மொத ராத்திரி’ படம் ஆகஸ்ட் 21 ஆம் தேதி ரிலீஸாகி மொரட்டு ஹிட்டாகியுள்ளது. இதனால் வெரி ஹேப்பியான  படக்குழுவின்தேங்ஸ் கிவிங் மீட் சென்னை பிரசாத் லேப்பில் செப்டம்பர் 05-ஆம் தேதி நடந்தது. இதில் பேசியவர்கள்…..

தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி “எல்லா திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடுவது ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தக் கதையை மற்ற மொழிகளிலும்  எடுத்துச் செல்லும் எண்ணம் இருக்கிறது. ‘குட் பேட் அக்லி’, ‘டியூட்’ படங்களை தொடர்ந்து தமிழில் இது எங்களுக்கு மூன்றாவது வெற்றி படம். இந்த  மொத ராத்திரி படத்துடன் ரிலீஸான் ‘இருமுடி கட்டு’ படத்தையும் வெற்றி பெற வைத்த அனைவருக்கும் நன்றி”.

இந்த வார அங்குசம் வார இதழில்…

Motha Rathiriநடிகர்கள் அப்துல் லீ, கார்த்திகேயன், திலீப் , நடிகைகள் சுமித்ரா தேவி, வர்ஷினி கார்மேகம், இனியா ராம், தீபிகா,  இசையமைப்பாளர் பரத் சங்கர், எடிட்டர் அசோக் அர்ஜூனன், கேமரா மேன் சுரேந்திரன் பரஞ்சோதி ஆகியோர் மைத்ரி மூவி மேக்கர்ஸுக்கு தங்களின் நெஞ்சார்ந்த நன்றியைச் சொல்லி, மகிழ்ச்சிப் பெருக்குடன் பேசினார்கள்.

நடிகர் சேத்தன் “இந்தப் படத்தின் மூலம் பல சூப்பர் ஸ்டார்களும், லேடி சூப்பர் ஸ்டார்களும் உருவாக இருக்கிறார்கள்”.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இயக்குநர் ராஜா கருப்பசாமி “என் கதையை நம்பி வாய்ப்பளித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றிக் கடன்பட்டுள்ளேன்.ஆறு வருடத்திற்கு முன்னால் இந்தக் கதையை எடுத்துக்கொண்டு அலைந்த போது எல்லோரும் சொன்ன ஒரே வார்த்தை ரிஷிகாந்தை மாற்ற வேண்டும் என்பதுதான். ஆனால், இப்போது தமிழ் சினிமாவிற்கு ஐடியாலஜியோடும் சமூகப் பொறுப்போடும் ஒரு ஹீரோ கிடைத்துவிட்டார்”.

நடிகர் பக்ஸ் “இது போன்ற நல்ல படங்கள் வெளியாகி வெற்றி பெற தயாரிப்பாளர்கள்தான் முக்கிய காரணம். அந்த வகையில், இந்த கதையை தேர்ந்தெடுத்து தயாரித்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. பலருடைய வாழ்க்கையில் இந்த படம் ஒளி ஏற்றி இருக்கிறது”.

ஹீரோ ரிஷிகாந்த்“ஆறு வருடங்களாக இந்தப் படத்தை நானும் தம்பி ராஜா கருப்பசாமி யும் சுமந்து கொண்டிருந்தோம். எங்களை நம்பி வாய்ப்பளித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. குடும்பத்தோடு அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து பார்த்து சிரித்து மகிழும்படியான ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்தோம். அது இன்று நடந்திருக்கிறது”.

—   ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.