அங்குசம் பார்வையில் ‘ஐ ஆம் கேம் ‘

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தயாரிப்பு: துல்கர் சல்மான் & ஜோம் வர்கீஸ், டைரக்டர்: நஹாஸ் ஹிதாயத், ஆர்டிஸ்ட்: துல்கர் சல்மான், கயாது லோஹர், மிஷ்கின், ஆண்டனி வர்கீஸ், சம்யுக்தா விஸ்வநாதன், கதிர், ஜெயசுதா, யோகி பாபு ( க்ளைமாக்ஸில்) திரைக்கதை: சஜீர் பாபா, பிலால் மொய்து, இஸ்மாயில் அபூபக்கர், ஒளிப்பதிவு: ஜிம்ஷ் காலித், இசை: ஜேக்ஸ் பிஜாய், எடிட்டிங்: சாமன் சாக்கோ, காஸ்ட்யூம்: மஷார் ஹம்சா, நடனம்: சாண்டி, பிஆர்ஓ: யுவராஜ்.

பெரும் பணக்காரரான ஜான் ( துல்கர் சல்மான்) காஸ்ட்லியான  க்ளப்புகளில் சூதாடி மூன்றரை கோடி கடனாளியாகிறார். கடன் கொடுத்த தாதா ( பாகுபலி பிரபாகர்) ஜானின் ஆபீசுக்கே வந்து அவரை பொளந்து கட்டுகிறார். மகனின் கடனை அடைக்க தனது சேமிப்பு பணம் 60 லட்சத்தை தருகிறார் தாய் ஜெயசுதா. அந்தப் பணத்தை வைத்து இழந்த மூன்றரை கோடியை எடுக்க, சிபிஎல் ( அதாங்க ஐபிஎல்) கிரிக்கெட் பெட்டிங்கில் இறங்குகிறார். தாய் தந்த 60 லட்சமும் அதில் அம்பேலாக, ஆத்திரமாகும் ஜான் சூதாட்ட க்ளப்பையே சூறையாடி, இழந்த 60 லட்சத்துடன் காரில் எஸ்கேப் ஆகி போகும் போது ஆக்சிடெண்டில் சிக்கி வலது கையை இழக்கிறார்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

இதனால் வேறொரு விபத்தில் இறந்த  ஒருவரின் வலது கையை இவருக்கு பொருந்துகிறார் டாக்டர். அந்தக் கை இவரின் கையான பிறகு… திடீர் திடீரென அந்தக் கைக்குள் ஸ்பெஷல் பவர் வருகிறது. துல்கர் சல்மானின் வலது கை யாருடைய கை? அந்தக் கையின்  ‘பவர்’ ரகசியம் என்ன? இதான் இந்த ‘ஐ ஆம் கேம் ‘-ன் ஸ்பெஷல் ஆட்டம்.

வலது கைக்கு மட்டும் பவர் வந்த பிறகு துல்கரின் நடிப்பு ஆட்டம் சூப்பர் ஆட்டம். கையின் இம்சையால் பல வழிகளில் தற்கொலைக்கு முயற்சி செய்யும் போது கையுடன் பேசுவது, கை பொருத்திய டாக்டரையே குளோஸ் பண்ண முயற்சித்து குமுறுவது, தனக்கு சிகிச்சை அளிக்கும் நர்ஸ் கயாது லோஹர் மீது லவ் வந்து, பிறகு அவரையே வெறுத்து ஒதுக்குவது, கிரிக்கெட் பெட்டிங் மாஃபியா மிஷ்கினைப் பார்த்ததுமே வலது கைக்கு ஏன் பவர் வருகிறது என கண்டுபிடிக்க களம் இறங்குவது, க்ளைமாக்ஸில் மிஷ்கினை துவம்சம் செய்வது என துல்கர் சல்மானின் துடிப்பான ஆட்டம், 6 பந்தில் 6 சிக்சர் அடித்த மாதிரி செம ஜோர்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இந்த ‘கேம்’-ல்  துளியும் கிளாமர் காட்டாமல் நடிப்பில் ஸ்கோர் பண்ணிவிட்டார் கயாது லோஹர். பெட்டிங் மாஃபியா டேவிட் ஆபிரகாமாக மிஷ்கினின் கொடூர ஆட்டம் அபாரம்.

800 கோடி பெட்டிங் அமவுண்டுக்காக சொந்த அணியை  ( மெட்ராஸ்) மும்பை அணியிடம் தோற்கச் செய்ய அவர் போடும் பிளான் பக்கா வில்லத்தனம். மிஷ்கின் மிரட்டலுக்கு பயப்படாத மெட்ராஸ் வீரர் விக்னேஷ் தாஸ் ( எ) விக்கியாக ஆண்டனி வர்கீஸின் பேட்டிங் பெர்ஃபாமென்ஸும் நடிப்பும் டபுள் ஓகே. இவரின் லவ்வராக சம்யுக்தா விஸ்வநாதன். “தெருவில் விளையாண்டாலும் ஸ்டேடியத்தில் விளையாண்டாலும் உன் முகத்தில் தெரியும் சிரிப்பு தான் உனக்கு பலம். அதை யாருக்காகவும் விட்ராத” சம்யுக்தா விஸ்வநாதனின் இந்த டயலாக் தான் படத்தின் ட்விஸ்ட். மிஷ்கினின் நரித்தனத்திற்கு துணை போகும் மெட்ராஸ் டீம் கேப்டனாக கதிர் நடிப்பும் அடடே போட வைக்கிறது.

பெட்டிங் மாஃபியாக்களின் குரூர முகத்தை டீடெய்லாக பதிவு செய்துள்ளார் டைரக்டர் நஹாஸ் ஹிதாயத். “இந்தியா -பாகிஸ்தான் மேட்சல தோத்தா தான் தேசத் துரோகம். இது ஜஸ்ட் எண்டெர்டெய்ன்மெண்ட்” மிஷ்கின் பேசும் இந்த டயலாக் மூலம் ஐபிஎல் சீட்டிங்கை அம்பலப்படுத்திவிட்டார் டைரக்டர்.  மிஷ்கின் கும்பல், கயாதுவையும் சம்யுக்தாவையும் கட்டி வைத்து சித்ரவதை செய்வது ரொம்ப ஓவர்.  அதைவிட ரொம்ப ரொம்ப ஓவர் க்ளைமாக்ஸ் ஃபைட்டுக்கு முன்னால ஒரு ஃபைட், அதுக்கப்புறம் க்ளைமாக்ஸ் ஃபைட்டுன்னு மொத்தம் நாற்பது நிமிசம் ஃபைட்….. தாங்க முடியலடா சாமீ….. மத்தபடி ‘ஐ ஆம் கேம்’ ஓகே தான்.

அங்குசம் பார்வையில் ‘ஐ ஆம் கேம் ‘ 49/100

—   ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.