விசிக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு…

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாநகர மாவட்ட செயற்குழு உறுப்பினர் தில்லை சரவணன். இவர் 20வருடத்திற்கு மேலாக கட்சியில் உறுப்பினராக இருந்து பல்வேறு பதவிகளை வகித்து வருகிறார்.

இவர் தில்லைநகர் அடுத்துள்ள காந்திபுரம் பகுதியில் குடியிருந்து வருகிறார்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

நேற்று இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாள் நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட அலுவலகத்தில் பங்கேற்று விட்டு வீடு திரும்பினார்.

நள்ளிரவு 2மணி அளவில் சில சமூக விரோதிகள் இருசக்கர வாகனத்தில் வந்து பெட்ரோல் பாட்டில் வெடிகுண்டு வீட்டில் வீசி உள்ளனர்.

இதனைக் கண்ட குடும்பத்தினர் மற்றும் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அங்கிருந்து சமூக விரோதிகளை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

தகவல் அறிந்த மாநகர மேற்கு மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன் மற்றும் கட்சியினர் தில்லை சரவணன் வீட்டிற்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்பகுதியில் உள்ள உறையூர் காவல்நிலைய துணை ஆய்வாளர், நுண்ணறிவு பிரிவு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து கட்சியினர் திருச்சி உறையூர் காவல் நிலையத்திற்கு சென்று பெட்ரோல் பாட்டில் வெடிகுண்டு வீசிய சமூக விரோதி மீது நடவடிக்கை வேண்டும் என புகார் அளித்தனர்.

காவல்துறை உதவி ஆணையர் விஜயகுமார் சிந்தை சரவணனிடம் விசாரணை மேற்கொண்டார். பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

நள்ளிரவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.