மாற்றுத்திறன் மாணவியின் மருத்துவக்கனவை சிதைக்கலாமா?

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

40% உடல் ஊனத்துடன் மனம் தளராமல் இரண்டு வருடம் நீட் தகுதித்தேர்வுக்காக கடுமையாக உழைத்து படித்து, மாற்றுத்திறனாளிகளுக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்ற சமயத்தில், சென்னை மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா சார்பில் அவரது ஊனத்தை மதிப்பிடுவதில் குறைபாட்டை கண்டறிந்து இடம் ஒதுக்க மறுத்துவிட்டது.

இந்நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்துவிட்ட நிலையில், த.வெ.க. அரசு மேல்முறையீட்டுக்கு சென்றிருப்பதால் மருத்துவக்கனவு கலைந்து ஏமாற்றத்துக்கு ஆளாகியிருக்கிறார், தேனி – உத்தம பாளையம் தாலுகா தேவாரம் பகுதியை சேர்ந்த அய்யனார்  மகாலட்சுமி தம்பதியரின் மூத்த மகள் சசினா .

இந்த வார அங்குசம் வார இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

மாற்றுத்திறன் மாணவியின் மருத்துவக்கனவு40 சதவீதம் மாற்றுத்திறனாளி என்பதற்கான நிரந்தர அடையாள எண் கொண்ட சான்றிதழை வைத்திருக்கும் நிலையில், அவர் 72% மாற்றுத்திறனாளி என்பதாக மறுத்து வாதிடுகிறது சென்னை மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா.

மாணவி சசினாவுக்கு ஆதரவாக, மதுரைக்கிளை நீதிபதி விக்டோரியா கௌரி வழங்கிய உத்தரவுக்கு தடை கோரி, கல்லூரியில் சேர்ந்து கல்விக்கட்டணத்தையெல்லாம் செலுத்திவிட்ட நிலையிலும்கூட,  தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கும் விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

—   ஜெய்ஸ்ரீராம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.