ரூ.800 கோடி நிதி மோசடி! EOW-வில் திரண்ட முதலீட்டாளர்களால் பரபரப்பு!
ரூ.800 கோடி பணத்தை முதலீட்டாளர்களுக்கு உடனடியாக வழங்ககோரி மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் பாதிக்கப்பட்டவர்கள் குவிந்ததால் பரபரப்பு….
அக்ரோ டிஸ்க் குழும நிதிநிறுவன மோசடி வழக்கு ரூ800 கோடி பணத்தை முதலீட்டாளர்களுக்கு உடனடியாக வழங்ககோரி மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் பாதிக்கப்பட்டவர்கள் புகாரளித்தனர். 2006ஆம் ஆண்டு மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட டிஸ்க் அசெட்ஸ் லீடு இந்தியா லிமிடெட், டால் மார்க்கெட்டிங் சொலிசன் லிமிடெட் , ஐயன் மார்க்கெட்டிங் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட 34 துணை நிறுவனங்களை உமாசங்கர் ஜனார்த்தனன், அருண்குமார், சரவணகுமார் உட்பட்ட மற்றும் அவர்களின் உறவினர்களால் நடத்தப்பட்டது.
இதில் மாதம் 100 முதல் 1000 ,2000வரை மாதாந்திர தவணை முறைகளால் சேமிப்புகளை 5ஆண்டுகளுக்கு 12.5 சதவீத வட்டியுடன் முதலீட்டுத் தொகையை சேர்த்து திரும்பத் தருவதாக கூறி பலலட்சம் மக்களிடமிருந்து 1137கோடிகளை திரட்டி உள்ளனர். அதில் 5 லட்சம் சேமிப்பாளர்களுக்கு ஏறக்குறைய 400கோடிகளுக்கு மேல் பட்டுவாடா செய்துள்ளனர். மீதமுள்ள 8 லட்சம் நபர்களுக்கு வழங்க வேண்டிய தொகையை 2015-16 ஆம் ஆண்டுகளில் SEBI தலையிட்டு நிறுவனங்களின் செயல்பாடுகளை தடுப்பதை தொடர்ந்து சொத்துக்களை விற்றுப் பணத்தை வழங்க உத்தரவிடப்பட்ட நிலையில் மதுரை EOW மற்றும் பதிவுத்துறை மூலம் சொத்துக்களை விற்க தடை விதிக்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் சொத்துக்களைக் கைப்பற்றவும் விற்கவும் முன்னாள் தலைமை நீதிபதி பால வசந்தகுமார் தலைமையில் கமிட்டியும் சிறப்பு நீதிபதியாக சத்திய நாராயணன் தலைமையில் பெஞ்சும் நியமிக்கப்பட்டன.
இ.டி. (E.D.) மூலம் சொத்துக்களும் பணங்களும் கைப்பற்றப்பட்டதுடன் சட்டவிரோத பணப்ப பரிமாற்றதடை சட்டத்தின் கீழ் சிபிஐ மூலம் 3 ஆண்டுகள் சிறைக்குப்பிறகு ஜாமீனில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ஏலம் விட்டு ரூ. 220கோடி வரை சேகரிக்கப்பட்டது. 2022-ல் முதலீட்டாளர்களுக்குப்பணம் கொடுக்கக்கோரிய ‘Claim FormVerification,மற்றும்MaduraiTanpidCourt’ கோரிய தடை உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.
மேலும் டெல்லி உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் இறுதி விசாரணையில் டிஸ்க் வழக்குக்கு முக்கியத்துவம் கொடுத்து முதலீட்டாளர்களுக்குப் பணத்தை விரைந்து பட்டுவாடா செய்ய வேண்டும் எனஅறிவுறுத்தப்பட்டது. இணையதளம் மூலம் பதிவு செய்த முதலீட்டாளர்களுக்குப் பணத்தைப் பட்டுவாடா செய்வதற்கான வழிவகைகளைக் கண்டு தடைகளை நீக்கிடவும் கடந்த 5 மாதங்களாக வாய்தாவில் நீடிக்கும் மதுரை TanpidCourt-ன் இரண்டாம் பாக வழக்கை விரைவுபடுத்தவும் கோரி பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களும் முகவர்களும் இணைந்து மதுரை EOW அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
உடனடியாக இந்த நிறுவனத்தில் கட்டியவர்களுக்கு பணபலன்களை கிடைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் பலரும் மிகுந்த பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு உடனடியாக பணத்தை திருப்பிதர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
சுந்தரம்,
தலைவர் டிஸ்க்டால்ஐயன் குழும நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் முகவர்கள் நலசங்கம்






Comments are closed, but trackbacks and pingbacks are open.