அவர்கள் ஏன் அந்தப்பக்கம் இருக்கிறார்கள் ?
ஜெயமோகன், வெண்ணிலா போன்றவர்கள் ஏன் சங்கிகளின் அரசியலை முன்வைக்கிறார்கள்? அண்மையில் நண்பர் பெருமாள் முருகனுடன் பேசிக் கொண்டிருந்தபோது தெரிந்து கொண்ட ஒரு செய்தி.
சேத்துமான் போல அவரது கதைகள் ஒன்றிரண்டு படமாகி இருந்தாலும் பாலா, சுரேஷ் கிருஷ்ணா, வசந்தபாலன், சாமி போன்ற வணிகரீதியான இயக்குநர்களுக்கு அவரது கதைகள் தேவைப்படவில்லை. நண்பர் அழகிய பெரியவனையும் இவ்விஷயத்தில் முருகனுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
கிருஷ்ணா சுவீட்ஸோ, நல்லியோ, தினமலரோ கூட்டம் நடத்த ஸ்பான்சர் செய்ய வேண்டுமென்றால் அது காலச்சுவடாகவோ, அல்லது அந்த வகையறாவைச் சேர்ந்த ஒரு பேனராகவோ இருந்தால்தான் நடக்கும்.
அந்த அடிப்படையில் ஒருவர் இலக்கியத்துறையில் எலீட்டாக வலம் வர வேண்டுமென்றால் ஒரு வலதுசாரியாகவோ, அல்லது வர்க்கம்சாரா அக்மார்க் இலக்கியவாதியாகவோ இருக்க வேண்டும்.
ஜெயமோகன், எஸ்ரா ஆக இதுதான் அடிப்படை.
அந்த லட்சணத்தோடு இருந்தால் அத்தகையவர்களை வலதுசாரிகள் மட்டுமல்ல இடதுசாரிகளும் தங்கள் தலையில் சுமந்து கொண்டு வந்து மக்கள் தலையில் கட்டுவார்கள்.
அய்யம் இருந்தால், ஜெயமோகனை வைத்து இடதுசாரி எழுத்தாளர் அமைப்புகள் எத்தனைக் கூட்டம் நடத்தியிருக்கிறார்கள் என்று கேட்டுப் பாருங்கள்.
பவா செல்லத்துரை, வெண்ணிலா போன்றோர் ஜெயமோகனின் அணுக்கப்பட்டியலில் வர அத்தகைய கூட்டங்கள் எப்படி உதவின என்று கேட்டுப் பாருங்கள்.
சாதி ஒழிப்பு மாநாடுகள் நடந்த தமிழ்நாட்டில் ச.தமிழ்ச்செல்வனைப் போன்றவர்கள் சாதிகளை ஒழிக்க வேண்டியதில்லை; அவற்றுக்கிடையே நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும் அதுதான் தேவை என்று எப்படிச் சொல்கிறார்கள்?
இக்கருத்து சங்கிகளின் கருத்திலிருந்து எப்படி மாறுபடுகிறது? ஆதிக்கத்தின் பக்கம் இருப்பது அபாயமற்றது மட்டுமல்ல; வசதியானது; மதிப்பிற்குரியது. இதைத் தெரிந்து கொண்டவர்கள் ஜெயமோகன் பக்கம் நிற்கிறார்கள். அவ்வளவு தான்!
— மணி மதிவண்ணன்






Comments are closed, but trackbacks and pingbacks are open.