திருச்சியில் இத்தனை கடைகளா? மக்கள் தேர்வு என்ன?

திருச்சி தெப்பக்குளம் பகுதியில் இருந்த சிறு வியாபாரிகளுக்கு, தற்போது வாழை இலை உணவகத்திற்கு அருகில் ஒருங்கிணைந்த வணிக வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கான ஆடைகள், உள்ளாடைகள், காலணிகள், பைகள், பெல்ட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

பெரிய கடைகளில் அதிக விலைக்கு விற்கப்படும் பொருட்களை, இங்கு மலிவான விலையில் வாங்கலாம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கொரியன் ஷூ உள்ளிட்ட புதிய மாடல் காலணிகளும் கிடைக்கின்றன. போக்குவரத்து நெரிசல் மற்றும் மக்கள் கூட்டம் இல்லாமல் பொருட்களை வாங்குவதற்கு ஏற்ற வகையில் இந்த வளாகம் அமைந்துள்ளது. இருப்பினும், இந்த வணிக வளாகம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

தீபாவளி துணி எடுக்க திருச்சியில் இத்தனை கடைகளா? மக்கள் தேர்வு என்ன?

Comments are closed, but trackbacks and pingbacks are open.