புதிய தளம் “Lalgudi.in” அறிமுகம் – 576 பேருக்கு வேலைவாய்ப்பு!
டாக்டர் லீமாரோஸ் மார்டின் MLA முன்னெடுப்பில் “Lalgudi.in” இணையதளம் தொடக்கம் – 576 இளைஞர்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கல்!
கழக மகளிரணி இணைச் செயலாளரும், லால்குடி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் லீமாரோஸ் மார்டின், MLA, அவர்கள், லால்குடி தொகுதி மக்களின் நலனையும், இளைஞர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, “Lalgudi.in” என்ற புதிய இணையதளத்தை 24.10.2026 அன்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வையொட்டி, லால்குடி எம்.எல். மஹாலில், தொகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் 66 நிறுவனங்கள் பங்கேற்ற மாபெரும் வேலைவாய்ப்பு முகாமும் நடைபெற்றது.
இந்த முகாமில் சுமார் 2,250 படித்த இளைஞர்களும் இளம் பெண்களும் பங்கேற்றனர். அவர்களில் 576 பேருக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
லால்குடி தொகுதி மக்களுக்கு அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் நோக்கில், இளைஞர்களின் திறமைக்கேற்ற வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன், தொகுதியின் வளர்ச்சிக்கும் பங்களிக்கும் வகையில் இம்முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களின் முன்னேற்றம்; லால்குடியின் வளர்ச்சி; மக்களின் நலன் — அதுவே இலக்கு!






Comments are closed, but trackbacks and pingbacks are open.