மஞ்சள் மற்றும் நீல நிற ஒட்டுப் பொறி பயன்பாடு பற்றி வேளாண் மாணவர்கள் களவிளக்கம்
திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டாரத்தில், நாளந்தா வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் செ. ஆதித்யன், பெ. அன்பழகன், செ. தேவஅபிஷேக் , க. தினேஷ், வி. மதுபாலன், செ. நிரஞ்சன், சு. ராஜேந்திர பிரசாத், அ. விஜயசாரதி, ரா. விஜேஷ், அ. விமல்ராஜ் மற்றும் கு. விஷ்ணு பிரசாத் ஆகியோர், முதல்வர் முனைவர். வெங்கடபிரபு அவர்களின் வழிகாட்டுதலிலும், பாட ஆசிரியர் திரு. ம. மோகன்ராஜ் அவர்களின் மேற்பார்வையிலும், ஓருங்கிணைப்பாளர்களான முனைவர். கண்ணன் மற்றும் திரு. நந்தகுமார் ஆகியோரது ஆலோசனையிலும் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின்( RAWE) கீழ் அக்.28-ல் களப்பயிற்சி மேற்கொண்டனர்.

இதன் ஒரு பிரிவாக, திண்ணியம் கிராமத்தில் மஞ்சள் மற்றும் நீல நிற ஒட்டுப் பொறி பற்றி விவசாயிகளுக்கு மாணவர்கள் களவிளக்கம் செய்தனர். இந்த முறையில் பூச்சிக் கட்டுப்படுத்துவது, பூச்சி கொள்ளிகளின் பயன்பாட்டை குறைத்தல் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து வேளாண் கல்லூரி மாணவர் செ. தேவ அபிஷேக் அவர்களால் விழிப்புணர்வு செய்யப்பட்டது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.