தயாரிப்பாளரான டைரக்டர்!
‘ரங்கோலி’, ‘மெட்ராஸ்காரன்’ ஆகிய படங்களை டைரக்டர் வாலி மோகன் தாஸ் இப்போது தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். ஸ்ரீ சுமனோஹரா புரொடக்ஷன்ஸ் & கிராடிடியூட் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து தனது இந்தியா பிலிம் ஃபேக்டரியின் முதல் தயாரிப்பினை டைரக்ட் பண்ணியுள்ளார் வாலி மோகன் தாஸ். இவருடன் இணைந்து கதை எழுதியுள்ளார் உமர் எஸ். ஒளிப்பதிவு : ஆர்தர் ஏ.வில்சன், இசை : சாம் சி.எஸ்.
டீஜே அருணாச்சலம் ஹீரோவாக நடிக்க, தெலுங்கு சினிமாவின் இளம் ஹீரோயின் திவிஜா பிரபாகர், இப்படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். அனைத்துத் தரப்பு ரசிகர்களுக்கும் ஏற்ற வகையில் உருவாகி வரும் இப்படத்திற்கும் இன்னும் தலைப்பு வைக்கவில்லை. முதல் கட்டப்படப்பிடிப்பு முடிந்துள்ளது.
— ஜென்ஸ்
Comments are closed, but trackbacks and pingbacks are open.