ஒப்புகைச் சீட்டுகள் மாலையாக! 15 ஆண்டுகளாகியும் தீராத நில ஆக்கிரமிப்பு புகார்!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், வாழவந்தான்கோட்டையில் பொன்னகர் அருகே உள்ள நிலத்தில் பொது இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, ஃபெலிக்ஸ் ஜெயராஜ் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் புகார் மனு அளித்துள்ளார். சுமார் 1.93 ஏக்கர் நிலத்தில் உள்ள மூன்று பொது இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், போலி பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக கடந்த 15 ஆண்டுகளாகப் போராடி வருவதாகவும், இதுவரை ஆறு முதல் ஏழு முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். தாசில்தார் உத்தரவிட்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, இதுவரை அளித்த மனுக்களின் ஒப்புகைச் சீட்டுகளை மாலையாக அணிந்து நூதன முறையில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

அரசு அதிகாரிகள் உத்தரவை மதிக்கவில்லையா? கலெக்டரிடம் மீண்டும் மனு! 

Comments are closed, but trackbacks and pingbacks are open.