Friday, November 20, 2026 | 2:14 PM IST

அங்குசம் பார்வையில் ‘சத்தியவான் சாவித்திரி’

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

தயாரிப்பு: ‘டிரம்ஸ்டிக் புரொடக்சன்ஸ்’வெடிக்காரன் பட்டி சக்திவேல் & ‘ ஜி ஸ்டுடியோஸ்’ , டைரக்டர்: பிரவீன் எஸ்.விஜய், ஆர்டிஸ்ட்: கீர்த்தி சுரேஷ், மிஷ்கின், சாரு கேஷ், பிரிகிடா சாஹா, பால சரவணன், குமார் நடராசன், ஷில்பா மஞ்சுநாத், தீபா சங்கர், மதுசூதன் ராவ், ஆர்.சுந்தர்ராஜன், ஒளிப்பதிவு: அருள் வின்செண்ட், இசை: சாம் சி.எஸ்., எடிட்டிங்: ஜிகே பிரசன்னா, பிஆர்ஓ: சதீஷ், சிவா (எய்ம்)

தன்னைப் பெண் பார்க்க வரும் சூர்யாவிடம் [சாருகேஷ்] ”சட்டப்படிப்பு படித்திருக்கும் தான் சென்னையில் மிகப்பெரிய வக்கீலாக இருக்கும் மார்க்கண்டேயனிடம் ஜூனியராகச் சேர்ந்து பயிற்சி பெற்று பெரிய வக்கீலாக வேண்டும் என்பது தனது லட்சியம். அதனால் என்னைப் பிடிக்கலேன்னு எனது அப்பாவிடம் சொல்லாமல், ஆறு மாசம் கழிச்சு கல்யாணத்தை வச்சுக்கலாம்னு சொன்னா போதும்” என்கிறார் சாவித்திரி [கீர்த்தி சுரேஷ்]. ஆனால் சாருகேஷோ, பெண்ணை எனக்குப் பிடிச்சிருக்கு, உடனே கல்யாணத்தை வச்சுக்கலாம்” என கீர்த்தியின் அப்பாவிடம் சொல்ல, வேண்டாவெறுப்பாக கழுத்தை நீட்டி கோயம்புத்தூரிலிருந்து சென்னைக்கு வருகிறார். கணவனும் மனைவியும் தனித்தனி படுக்கைகளில்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

சத்தியவான் சாவித்திரிதனது காலேஜ் சீனியரான பால சரவணன் மூலம் மிஷ்கினிடம் ஜூனியராக சேர்கிறார் கீர்த்தி சுரேஷ். அப்போது செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜென்  சிலிண்டர் பற்றாக்குறையால் ஒரு குழந்தை இறந்துவிட, சிலிண்டர் கொள்முதலில் ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்படுகிறார் ஆஸ்பத்தியிரியின் டீன் ’ராஜா ராணி’ பாண்டியன். இவருக்கு எதிராக வாதிடுகிறார் மிஷ்கின். வழக்கு வேகமெடுத்து தீர்ப்பு நெருங்கும் நேரம் பாண்டியன் குற்றவாளி இல்லை எனத் தெரிந்து அவருக்கு ஆதரவாக, தனது சீனியர் மிஷ்கினுக்கு எதிராக கோர்ட்டில் ஆஜராகிறார் கீர்த்தி சுரேஷ். இதில் அவருக்கு வெற்றி கிடைத்து, பாண்டியனும் விடுதலை ஆகிறார்.

இப்ப தான் கீர்த்தியின் கணவன் சாருகேஷ், வர்ணிகா என்ற இளம் பெண்ணைக் கொலை செய்ததாக போலீஸ் கைது செய்கிறது. இப்போது சாருகேஷுக்கு எதிராக வாதிடுகிறார் மிஷ்கின். கணவனைக் காப்பாற்ற களம் இறங்குகிறார் கீர்த்தி சுரேஷ். சாருகேஷ் விடுதலை ஆனாரா? வர்ணிகா என்பவர் யார்? இதன் சூப்பர் ட்விஸ்ட் க்ளைமாக்ஸ் தான் இந்த ‘சத்தியவான் சாவித்திரி’.

சத்தியவான் சாவித்திரிஆரம்பத்தில் லேசான கலகலப்புக்கு பாலசரவணனும் கீர்த்தியும் க்யாரண்டி. அதிலும் மிஷ்கினின் ஜூனியர்களில் ஒருவரான  பாலசரவணனை “அண்ணே…அண்ணே” என பாசமுடன் அழைப்பதும் கீர்த்தியை பாலசரவணன் காமெடியாக டீஸ் பண்ணுவதும் கலகலப்பு ஏரியா. அதற்கடுத்து மிஷ்கினிடம் சக ஜூனியர்களுடன் உட்கார்ந்து சட்ட நுணுக்கங்களைத் தெரிந்து கொள்வது, அதன் பின் மிஷ்கினுக்கு எதிராக முதன்முதலில் கோர்ட்டில் வாதாட ஆரம்பிக்கும் போது திக்கித் திணறுவது என மெல்ல வேகம் எடுக்கும் கீர்த்தி சுரேஷின் நடிப்பு ஏரியாவில், நீதிபதி குமார் நடரசானைப் பார்த்து, “நீங்க பத்து லட்சம் லஞ்சம் வாங்குனாதா வச்சுக்கங்க” என குண்டைத் தூக்கிப் போட்டதும் வேர்த்து விறுவிறுத்துப் போகும் குமார் நடராசனைப் பார்க்கும் சீன் டாப் ஏரியா.

அதே போல் சாருகேஷிடம் முதலில் கோபம், ஊடல், அப்புறம் கூடல் ஏரியாவில் கொஞ்சம் நெருக்கம் காட்டி, அந்த ஏரியாவிலும் கவர்கிறார் கீர்த்தி சுரேஷ். க்ளைமாக்ஸ் யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

ஆரம்பக் காட்சிகளில் கொஞ்சம் ஓவராக உடல் அசைவு, வசன உச்சரிப்பைக் கொட்டினாலும் தனக்கு எதிராக கீர்த்தி சுரேஷ் ஆஜரானதும் கரெக்டான மீட்டரில் வந்து நிற்கிறது மிஷ்கினின் நடிப்பு.

சத்தியவான் சாவித்திரிபடத்தின் முதல் சீனில் சத்தியவான் சாவித்ரி மேடை நாடகத்தை ப்ளாக் & ஒயிட்டில் காட்டி, அதன் பின் கீர்த்தி சுரேஷுக்கு சீன்கள் டெவலப் ஆகும் போதெல்லாம் அந்த நாடகத்தின்  கண்டினியூட்டியைக் காட்டி செமத்தியான டைரக்‌ஷன் ‘டச்’ வைத்திருக்கிறார் டைரக்டர் பிரவீன் எஸ்.விஜய். அந்த நாடகத்தில் சாவித்திரியாக நடித்த பிரிகிடா சாஹா, எமதர்மனாக நடித்த ஜி.எம்.குமார், சாருகேஷின் கள்ளக் காதலியாக வரும் ஷில்பா மஞ்சுநாத், கீர்த்தியின் அப்பாவாக மதுசூதன் ராவ், தாத்தாவாக ஆர்.சுந்தர்ராஜன், கீர்த்தி வீட்டு வேலைக்காரியாக தீபா சங்கர் என எல்லா கேரக்டர்களுமே நிறைவான கவனம் ஈர்க்கிறார்கள்.

படத்தின் ஆரம்பத்தில் வரும் கல்யாணப் பாடல், கணவனைக் காப்பாற்ற கீர்த்தி சுரேஷ் போராடும் போது பேக்ரவுண்டில் ஒலிக்கும் பாடல் இதில் சாம் சி.எஸ்.சின் இசை மனசுக்குள் பதிகிறது. அதே போல் கீர்த்தி சுரேஷ் மிஷ்கினுக்கு எதிராக வாதாட எழுந்திருக்கும் போது பின்னணி இசையால்  செம டெம்போ ஏற்றுகிறார் சாம் சி.எஸ். கோர்ட் ஹால் சீன்களில் கேமராமேன் அருள் வின்செண்ட் கோணங்கள் வெரைட்டியாக இருப்பது பாராட்டுக்குரியது.

எமனிடம் போராடி தனது கணவன் உயிரை மீட்டாள் புராணக் கதையில் வரும் சாவித்திரி. இந்த டிஜிட்டல் சாவித்திரியோ அதற்கு நேர் எதிரானவள். முழு விபரங்களுக்கு முழுப்படத்தையும் பாருங்கள்.

அங்குசம் பார்வையில் ‘சத்தியவான் சாவித்திரி’ 53/100

—   ஆண்டவர்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.