Saturday, November 28, 2026 | 1:57 PM IST

திருச்சியில் சிட் பண்ட் முதலீட்டு புகார் – பாதிக்கப்பட்டவர்களுக்கு போலீசார் அழைப்பு!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்சி கருமண்டபம் பகுதியை சேர்ந்தவர் மேரிபிரியதர் ஷினி (வயது 36). இவரிடம் கடந்த 2021-ம் ஆண்டு பஷீர் என்பவர் அறிமுகமாகி, திருச்சி தில்லைநகரில் ஐஸ்வர்யம் சிட்பண்டு பிரைவேட் லிமிடெட் இயங்கி வருவதாகவும், அந்த நிறுவனத்தில் தான் கலெக்ஷன் ஊழியராக பணியாற்றி வருவதாகவும் கூறி உள்ளார்.

மேலும், அந்த நிறுவனத்தின் பொதுமேலாளராக சதீஸ்கண்ணாவும், முதன்மை நிர்வாக இயக்குனராக ராஜேஷ்கண்ணாவும் பணியாற்றி வருவதாக வும், இந்த நிறுவனத்தில் ரூ.1லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.4 ஆயிரம் வீதம் 25 மாதங்களுக்கு வழங்கப்படும் என்றும், 25 மாதம் முடிந்த பிறகு, 30 நாட்கள் கழித்து கட்டிய தொகை ரூ.1 லட்சமும் திரும்ப வழங்கப்படுவதாகவும் கூறி உள்ளார்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இதேபோல் ரூ.12 லட்சம், ரூ.2 லட்சம், ரூ.5 லட்சம் என பல்வேறு தொகை முதலீடு செய்யலாம் என்றும், அது மட்டுமின்றி ஏலச்சீட்டுகளும் நடத்தி வருவதாக கூறி உள்ளார். இதனை நம்பி மேரிபிரியதர்ஷினி ரூ.7 லட்சத்து 95 ஆயிரத்து 998-ஐ முதலீடு செய்து ஏமாந்துவிட்டதாக திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரின்பேரில் வழக்குப்ப திந்து தற்போது புலன்விசாரணையில் உள்ளது.

எனவே ஐஸ்வர்யம் சிட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் யாரேனும் இருப்பின் திருச்சி மன் னார்புரம் காஜாமலை பகுதியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் கொடுக்கலாம். இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.